பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 6-ந் தேதி தொடங்கியது. இதற்கு முன்னர் நடைபெற்ற 7 சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், இந்த சீசனை அவருக்கு பதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதையடுத்து ஒரு மாதம் முடிவில் மேலும் ஆறு போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வீட்டுக்குள் சென்றனர்.
24
Bigg Boss Tamil season 8
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் ஆண்கள், பெண்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு இடையே போட்டி நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த போட்டி சுவாரஸ்யமாக இல்லை என்கிற விமர்சனம் தான் தொடர்ந்து எழுந்து வந்தது. இதனால் அதிரடி முடிவெடுத்துள்ள பிக் பாஸ் 50வது நாளான நேற்று இரண்டு அணிகளுக்கு இடையே இருந்த கோடு எடுக்கப்பட்டு, இனி ஒரே அணியாக விளையாட வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.
பிக் பாஸின் இந்த பிளானாவது ஒர்க் அவுட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நாமினேஷனில் 13 போட்டியாளர்கள் சிக்கி இருந்தனர். இதில் சிவக்குமார் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் பெற்று எஸ்கேப் ஆனதால் எஞ்சியுள்ள 12 பேரில் யார் எலிமினேட் ஆகப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற வர்ஷினி வெங்கட் எலிமினேட் ஆனதாக அறிவிக்கப்பட்டார்.
44
Varshini Venkat Salary
வழக்கமாக போட்டியாளர்கள் எலிமினேட் ஆனால் கண்ணீர் விட்டு அழுவார்கள். ஆனால் வர்ஷினி சிரித்த முகத்தோடு வெளியே சென்றார். விஜய் சேதுபதியிடம் பேசும்போதும் மூன்று வாரம் இருந்ததே தனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்ததாக கூறினார். பிக் பாஸ் வரலாற்றில் இப்படி சிரித்த முகத்தோடு எலிமினேட் ஆன போட்டியாளர் யாரும் இல்லை என விஜய் சேதுபதியே வியந்து பாராடினார்.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக வர்ஷினி வெங்கட் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது. அதன்படி அவர் மொத்தம் 21 நாட்கள் இந்நிகழ்ச்சியில் இருந்துள்ளார். இதனால் அவருக்கு ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் சம்பளமாக வாங்கி உள்ளாராம்.