13 வருடங்களுக்கு பின் தாயானார் வித்யா பிரதீப்; வைரலாகும் குழந்தையின் கியூட் புகைப்படம்!

First Published | Nov 25, 2024, 1:23 PM IST

நடிகை வித்யா பிரதீப் திருமணம் ஆகி 13 ஆண்டுகளுக்கு பின்னர் கர்ப்பமாக இருந்த நிலையில், தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ள தகவலை, புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். 
 

Vidya Pradeep

நடிகையும் மாடலுமான வித்யா பிரதீப், தன்னுடைய 18 வயதிலேயே 'விருந்தாளி' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்த போது, அந்த படத்தின் ஹீரோ மைக்கேல் ஈஸ்வரன் என்பவரை காதலிக்க துவங்கினார். பின்னர் பெற்றோர் சம்பந்தத்துடன் இருவரும் 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

Vidya Pradeep Studies and Acting

நடிகர் மைக்கல் ஈஸ்வரனுக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால், போட்டோகிராபியில் கவனம் செலுத்த துவங்கினார். வித்யா பிரதீப் பயோ டெக்னாலஜி படிப்பில் கவனம் செலுத்தி கொண்டே திரைப்பட வாய்ப்புகளையும் தேடினார். மைக்கில் தன்னுடைய மனைவியின் ஆசையை அறிந்து, மனைவிக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.

'கங்குவா' படத்தின் சோலி முடிஞ்சிது! நவம்பர் 29-ல் வெளியாகும் 9 புதிய படங்கள்!

Tap to resize

Vidya Pradeep Movies

வித்யா பிரதீப், அடுத்தடுத்து சிறந்த படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். அந்த வகையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வித்யா பிரதீப் நடித்த 'சைவம்' திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தேடி தந்தது. பின்னர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க 2 திரைப்படத்திலும் நடித்திருந்தார். ஹீரோயின் ஆக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், கதைக்கும் - கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொண்ட பல படங்களில் நடித்தார். அதை போல் சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலிலும் ஹீரோயினாக வித்யா பிரதீப் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதை வசீகரித்தார்.

Vidya Pradeep Pregnancy Photos

தற்போது தன்னுடைய கணவருடன் வெளிநாட்டில் வாழ்ந்து வரும் வித்யா பிரதீப், கடந்த மாதம் கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்தார். மேலும் நிறைமாத வயிற்றுடன் கணவருடன் எடுத்துக் கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் படு வைரலானது.

தனுஷை அசிங்கப்படுத்த நீலாம்பரியாக மாறி; கல்யாண வீட்டில் நயன்தாரா செய்த கலாட்டா!

Vidya Pradeep Blessed Boy Baby

திருமணமாகி 13 வருடங்களுக்குப் பின்னர் கர்ப்பமான வித்யா பிரதீப்புக்கு, நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவரே தன்னுடைய சமூக வலைதளத்தில் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள் பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தொடர்ந்து இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குழந்தையின் புகைப்படமும் வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!