தென்னிந்திய திரையுலகின் ஹாண்ட்சம் மற்றும் ரக்கட் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும், விஜய் தேவார கொண்டாவும் - ராஷ்மிகா மந்தனாவும், கடந்த 2019-ஆம் ஆண்டில் இருந்தே காதல் சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள்.
27
Geetha Govindham
'அர்ஜுன் ரெட்டி' திரைப்படம் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா, கன்னட நடிகையான ராஷ்மிகா தெலுங்கில் அறிமுகமான, 'கீதா கோவிந்தம்' திரைப்படத்தில் நேஷ்னல் கிரஷ்க்கு ஜோடியாக நடித்தார். இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் வெளியான இந்த படம், 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு... ரூ.132 கோடி வசூலை அள்ளியது.
மேலும் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா ஜோடியின் கெமிஸ்ட்ரியும் அதிகம் கவனிக்கப்பட்டது. இந்த படத்தை தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு மீண்டும் 'காம்ரேட்' படத்தில் நடித்தனர். இந்த படத்தில் இணைந்து நடிக்கும் போது தான் இவர்கள் இருவரும் காதலிக்க துவங்கியதாக கூறப்பட்டது.
47
Rashmika and Vijay Devarakonda love
ஆனால் கடந்த 5 வருடமாக இதை பற்றி எந்த ஒரு தகவலையும் வெளியிடாத ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும்... அடிக்கடி வெளிநாடுகளுக்கு டேட்டிங் சென்று செல்வதை மட்டும் வாடிக்கையாக வைத்துள்ளனர். அவவ்போது ஒரே இடங்களுக்கு சென்று தனித்தனியாக புகைப்படம் வெளியிட்டு கிசுகிசுவில் சிக்கி உள்ளனர்.
காதல் விவகாரம் வெளியே வந்ததில் இருந்து ஒன்றாக இணைந்து நடிப்பதை இருவருமே தவிர்த்து வருகின்றனர். ராஷ்மிகா கீதா கோவிந்தம் வெற்றிக்கு பின்னர், தன்னுடைய காதலர் ரக்ஷித் ஷெட்டியுடன் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், விஜய் தேவரகொண்டாவிடம் நீங்கள் சிங்கிளா என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, எனக்கு 35 வயதாகிறது நான் யாருடனாவது டேட்டிங் செய்யாமல் இருப்பேன் என நினைக்கிறீர்களா? என கேள்வி எழுப்பு ரிலேஷன்ஷிப்பில் இருப்பதை உறுதி செய்தார்.
67
Rashmika and Vijay Devarakonda
இதை தொடர்ந்து, ராஷ்மிகாவும் புஷ்பா பட புரோமோஷனில்... ராஷ்மிகாவிடம் தொகுப்பாளினி அஞ்சனா, உங்கள் வருங்கால கணவர் திரைத்துறையை சேர்ந்தவரா? என கேட்க, இதற்கு ராஷ்மிகா, இதற்கான பதில் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான் என சொன்னதும் அனைவரும் வாயடைத்துப் போயினர். இருவருமே காதலிக்கும் தகவலை அடுத்தடுத்து வெளிப்படுத்தி வந்த நிலையில் தற்போது இவர்களின் லன்ச் டேட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் ஒன்றாக அமர்ந்து ஹோட்டலில் சாப்பிடும் புகைப்படம் தான் இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படி வெளிப்படையாக டேட்டிங் செய்ய துவங்கி விட்டதால், விரைவில் இவர்களின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.