MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பேருந்து கவிழ்ந்து காந்தாரா படப்பிடிப்பில் விபத்து; நடிகர்கள் காயம்!

பேருந்து கவிழ்ந்து காந்தாரா படப்பிடிப்பில் விபத்து; நடிகர்கள் காயம்!

'காந்தாரா' படத்தின் முதன்மை பாகமாக, தற்போது எடுக்கப்பட்டு வரும் காந்தாரா சேப்டர்  1 திரைப்படத்தில்,  ​​ஜூனியர் நடிகர்களை அழைத்து வந்த பேருந்து கவிழுந்து விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Nov 25 2024, 06:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Rishab Shetty starrer Kantara

Rishab Shetty starrer Kantara

‘காந்தாரா’ படம் கடந்த 2022-ஆம் ஆண்டு பான்-இந்தியா திரைப்படமாக நாடு முழுவதும் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. ரிஷப் ஷெட்டி தனது கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இயக்கி - நடித்திருந்த இப்படம் ஓட்டு மொத்த தென்னிந்திய ரசிகர்களையும் தன் கவர்ந்த தனித்துவமான படைப்பாக இருந்தது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Kantara chapter 1

Kantara chapter 1

இந்த படத்தின் , இறுதி அரை மணி நேரம் நம்மை ஆன்மீக உலகில் சஞ்சரிக்க வைக்கிறது. இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக ரிஷிப் ஷெட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. 'காந்தாரா' திரைப்படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் பேனரில், விஜய் கிரகந்தூர் தயாரித்திருந்தார்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'காந்தாரா சேப்டர் 1' என்கிற பெயரில் இப்படத்தின் முதன்மை பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே காந்தாரா சேப்டர் 1 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வந்த நிலையில், இந்த படத்தில் நடிக்கும் கலைஞர்கள் பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

பிரமாண்ட வீடு; ராஜ வாழ்க்கை வாழும் அப்பாவுக்கு இரண்டு மனைவிகளோடு சிலை வைத்த முன்னணி ஹீரோ!

36
Kantara Actors met Accident

Kantara Actors met Accident

படப்பிடிப்புக்காக ஜூனியர் கலைஞர்களைக் ஏற்றிக்கொண்டு, சென்ற மினி பேருந்து செல்லும் வழியில் நிலைதடுமாறி கவிழ்ந்தது. கர்நாடக மாநிலம் கொல்லூர் அருகே உள்ள ஜட்கல் அருகே பேருந்து கவிழ்த்துள்ளது. பேருந்தில் 20 பேர் இருந்த நிலையில், இதில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பை உடனடியாக கேன்சல் செய்த படக்குழு, உடனடியாக காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்று  ஆறுதல் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது கன்னட திரையுலகில் பேரும் பொருளாக மாறியுள்ளது.
 

46
National Award Winner Rishap Shetty

National Award Winner Rishap Shetty

‘ஹோம்பாலே பிலிம்ஸ்’ மூலம் விஜய் கிரகந்தூர் தான் ‘காந்தாரா: சேப்டர் 1 திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார். ரிஷப் ஷெட்டி இந்த படத்தை இயக்கி - நடிக்கிறார். ‘காந்தாரா’ படத்தின் முந்தைய பாகமாக, ‘காந்தாரா: முதல் அத்தியாயம்’ எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா: முதல் அத்தியாயம்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலைப் பகிர்ந்து கொண்டார். அதன்படி இந்தப் படம் 2025 அக்டோபர் 2 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்தார். 

காதலை வெளிப்படுத்திய பின்னர் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா போன லன்ச் டேட்! வைரல் போட்டோஸ்!
 

56
Kantara Movie Life Time Collection

Kantara Movie Life Time Collection

குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ‘காந்தாரா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதாவது சுமார் ரூ.15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘காந்தாரா’ திரைப்படம், 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. மேலும், தயாரிப்பாளருக்கு பெரும் லாபத்தை ஈட்டித் தந்தது. காந்தாரா படத்திற்கு முன்பு என்ன நடந்தது என்ற கருப்பொருளில் இந்தப் படத்தை இயக்குகிறார் ரிஷப் ஷெட்டி. காந்தாராவில் காட்டப்பட்ட கதைக்கு முன்பு நடக்கும் கதை என்பதால் இந்த படம் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.
 

66
Kantara chapter 1 Movie Details

Kantara chapter 1 Movie Details

‘காந்தாரா’ மூலம் கொங்கன் நாட்டுப்புற வாழ்க்கையை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார் ரிஷப் ஷெட்டி.  தென்னிந்திய வரலாற்றில் பொற்காலம் என பெயர் பெற்ற கடம்ப ராஜ்ஜியத்தின் பின்னணியில் இந்தப் படம் உருவாகிறது. மூன்றாம் நூற்றாண்டின் கடம்ப ராஜ்ஜியத்தின் சிறப்பையும், அக்காலத்தின் அடையாளங்களையும் பிரதிபலிக்கும் வகையில், கர்நாடகாவில் உள்ள குந்தாபுர என்ற இடத்தில் இந்தப் படத்தின் செட் அமைக்கப்பட்டுள்ளது. பண்டைய யுத்த கலையான களரிப்பயிற்றி மேற்கொண்டு வருகிறார் ரிஷப் ஷெட்டி. மேலும் 'காந்தாரா' படத்தை விட 'காந்தாரா: சேப்டர் 1' அதிக பட்ஜெட்டில் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

'கங்குவா' படத்தின் சோலி முடிஞ்சிது! நவம்பர் 29-ல் வெளியாகும் 9 புதிய படங்கள்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Recommended image3
6 மணி காட்சி முதல் 100 ரூபாய் டிக்கெட் வரை அரசுக்கு பறந்த 13 கோரிக்கைகள்! அனுமதி கொடுப்பாரா முதல்வர்? காத்திருக்கும் திரையுலகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved