கேம் சேன்ஜ்சர் திரைப்படம் முழுக்க முழுக்க தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்றாலும் கூட, தமிழிலும் அந்த திரைப்படம் டப் செய்து வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இந்தியன் 2 திரைப்படத்தின் மூலம் இழந்த தன்னுடைய பெருமையை, மீண்டும் இந்த திரைப்படத்தின் மூலம் மீட்டெடுக்க இயக்குனர் சங்கர் போராடி வருகின்றார். நிச்சயம் ஒரு மெகா ஹிட் வெற்றியை கொடுத்து ஆக வேண்டும் என்கின்ற நிலையில் இப்போது சங்கர் இருந்து வருகிறார். ஆகவே கேம் சேஞ்சர் திரைப்படம் தமிழக அளவில் அல்லாமல் உலக அளவில் சுமார் ஆயிரம் கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.