வாய் திறந்து தூங்கும் பழக்கம் இருக்கா? சரி அது நல்லதா? இல்ல கெட்டதா?

By Ansgar R  |  First Published Nov 25, 2024, 11:53 PM IST

Sleeping With Mouth Open : பலருக்கு வாய் திறந்து தூங்கும் பழக்கம் உள்ளது. ஆனால் அப்படி வாய் திறந்து தூங்கும் அந்த பழக்கம் நல்லதா? இல்லை கேட்டதா?


நம் ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டுமானால், நன்றாக தூங்க வேண்டும். தூக்கம் பல நோய்களில் இருந்து நம்மை காக்கிறது. அதனால் தினமும் 6 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்களும், மருத்துவர்களும் கூறுகின்றனர். ஆனால் சிலருக்கு வாய் திறந்து தூங்கும் பழக்கம் இருக்கும். அவர்கள் மூக்கு வழியாக சுவாசிக்காமல் வாய் வழியாக சுவாசிக்கிறார்கள். ஆனால் வாய் திறந்து தூங்குபவர்களுக்கு சரியாக மூச்சு விடுவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள். சரி இப்படி வாய் திறந்து தூங்குவதால் என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும் என்பதை இப்போது பார்க்கலாம்.

குளிருக்கு முகத்தை மூடி தூங்குவீங்களா? அதனால் ஏற்படும் 'முக்கிய' பிரச்சனை

Latest Videos

undefined

பல் ஆரோக்கியம்

வாய் திறந்து தூங்குபவர்கள் மூக்கின் வழியாக சுவாசிப்பதில்லை. சுவாசம் வாய் வழியாக மட்டுமே செய்யப்படுகிறது. எனவே இது சில நேரங்களில் தீர்க்க முடியாத சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் அது உங்கள் பல் ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமானது என்று மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். 

குறட்டை

குறட்டைக்கு பல காரணங்கள் உள்ளன, பொதுவாக குறட்டை விடுபவர்கள் நன்றாக தூங்குவார்கள். ஆனால் இந்த குறட்டையால் அருகில் உறங்குபவர்களால் தூங்க முடிவதில்லை. உண்மையில், வாய் திறந்து வாய் வழியாக சுவாசிப்பது கூட குறட்டையை ஏற்படுத்தும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இருமல் 

இருமல் பல காரணங்களால் ஏற்படலாம். இந்த இருமல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இதை குறைக்க பல வகையான சிரப் மற்றும் மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சிலருக்கு பல நாட்களாக இருமல் இருக்கும். குறிப்பாக வாய் திறந்து தூங்குபவர்களுக்கு எப்போதும் இருமல் வரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம் பிரச்சனையால் பலர் அவதிப்படுகின்றனர். இதனால் நாலுபேர் மத்தியில் பேசுவது கூட சிரமமாக உள்ளது. பலருக்கு வாய் துர்நாற்றம் ஏன் வருகிறது என்று கூட தெரியாது. உண்மையில், வாய் துர்நாற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளன. வாய் திறந்து தூங்குவதும் அதில் ஒன்று என்கின்றனர் நிபுணர்கள். வாய் திறந்து தூங்குவது என்பது வாய் வழியாக சுவாசிப்பதாகும். இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

காலிஃபிளவர் நல்லது.. ஆனா இந்த '1' விஷயம் தெரியாம சாப்பிட்டா அவ்வளவு தான்!!

click me!