டெய்லி இரண்டு துளசி இலை சாப்பிடுங்க; என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

By Ansgar R  |  First Published Nov 22, 2024, 11:55 PM IST

Basil Leaves Benefits : மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் துளசி இலைகள் அனைத்தும் நம் உடலுக்கு நன்மை பயக்கிறது. இந்த இலைகளால் என்னென்ன பிரச்சனைகள் குணமாகும் என்று பார்க்கலாம்.


பொதுவாக அனைவரின் வீட்டின் முன்பும் இருக்கும் துளசி இலைகளை உபயோகிப்பதன் மூலம் இருமல், சளி, தொண்டை கரகரப்பு போன்ற பல சின்ன சின்ன உடல்நல பிரச்சனைகள் மிக விரைவில் குறையும். இந்த நோக்கத்திற்காக அவற்றை மெல்லலாம் அல்லது தேநீரில் போட்டு குடிக்கலாம். ஆனால் இந்த துளசி இலைகளை கொண்டு நம்மால் வயிற்று பிரச்சனைகளை கூட தீர்க்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். அது குறித்து இப்பொது பார்க்கலாம். 

தினமும் 'புரோட்டீன் பவுடர்' உண்பது நல்லதா? உடம்புக்கு என்னாகும் தெரியுமா? 

Tap to resize

Latest Videos

undefined

வயிற்று பிரச்சனைகளுக்கு துளசி இலை

துளசி இலையில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இவை நம்மை பல நோய்களில் இருந்து விலக்கி வைக்கின்றன. குறிப்பாக இந்த துளசி இலைகள் வயிற்று உப்புசம், வாயு, அஜீரணம் போன்ற பல வயிறு தொடர்பான பிரச்சனைகளை விரைவில் குணப்படுத்த உதவுகிறது. 

செரிமானத்தை ஊக்குவிக்கிறது

துளசி இலைகளை உட்கொள்வதால் நமது செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படுகிறது. இதனால் செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகள் வராது. துளசி இலைகளை மென்று சாப்பிடுவதால் செரிமான நொதிகளின் உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால் செரிமானம் சீராகும்.

குடல் ஆரோக்கியம் 

துளசி இலைகளும் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இவற்றை உங்கள் வழக்கமான உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் இரைப்பை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வயிறு தொடர்பான பிரச்சனைகளும் அடிக்கடி வருவதில்லை. 

சரி துளசி இலைகளை எப்படி பயன்படுத்துவது?

ஒரு கப் சூடான துளசி டீ குடித்து வர வயிறு தொடர்பான பிரச்சனைகள் குறையும். இதற்காக நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியதில்லை. இதற்கு தேவையான அளவு தண்ணீர் எடுத்து சூடாக்கவும். சிறிது துளசி இலைகளை எடுத்து 5-10 நிமிடம் ஊற வைக்கவும். அவ்வளவுதான், துளசி டீ தயார்.

துளசி விழுது

வயிற்றுப் பிரச்சனைகளைக் குறைக்க துளசி விழுதையும் பயன்படுத்தலாம். இதற்கு சில துளசி இலைகளை எடுத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை நேரடியாக உங்கள் வயிற்றில் தடவவும். இப்படி செய்வதால் வயிற்று உப்புசம் விரைவில் குறையும்.

குளிர்காலத்தில் வரும் குதிகால் வெடிப்பு: இந்த '1' பொருள் போதும்; ஒரே வாரத்தில் மறையும்!

click me!