ராகவா லாரன்ஸ் துவங்கும் மாற்றம் அறக்கட்டளை! உதவிக்கரம் நீட்ட தயாராக இருக்கும் அவர் போட்ட விதைகள்!

By manimegalai aFirst Published Apr 23, 2024, 9:08 PM IST
Highlights

நடிகர் ராகவா லாரன்ஸ், மே 1-ஆம் தேதி முதல் 'மாற்றம்' என்கிற அறக்கட்டளை என்கிற அறக்கட்டளையை துவங்கி, அதன் பலருக்கு உதவ உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

ஒரு நடன இயக்குனராக சினிமாவில் தன்னுடைய பணியை துவங்கி, இன்று முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளவர் ராகவா லாரன்ஸ். இவர் சினிமாவில் தனக்கான தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் அளவுக்கு சம்பாதிக்க துவங்கிய பின்னர், பிறருக்கு உதவி செய்ய ஒரு தொகையை செலவழிக்க துவங்கினார்.

அந்த வகையில், ராகவா லாரன்ஸ், ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களை வளர்த்து, அவர்கள் படிக்க ஆசைப்படும் படிப்பையும் படிக்க வைத்து வந்தார். அதே போல் மருத்துவ உதவி தேவை படுபவர்களுக்கு உதவுவது, மாற்று திறனாளிகளுக்கு நடனம் சொல்லி கொடுப்பது, போன்றவற்றை வழக்கமாக வைத்திருந்தார். சமீப காலமாக, யாரேனும் கஷ்டப்படுவது தெரியவந்தால், அவர்களை தேடி சென்று உதவி வருகிறார்.

என்னால முடியல அத்தை..! ரோகிணியை கதற விடும் விஜயா.. முத்து செம்ம ஹாப்பி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்!

கடந்த 20 வருடங்களாக இவர் வளர்த்து வந்த பிள்ளைகள் தற்போது நல்ல நிலைக்கு முன்னேறி, பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வருவது மட்டும் இன்றி கை நிறைய சம்பாதித்து வருகிறார்கள். 

Iswarya Menon: நடிகை ஐஸ்வர்யா மேனன் சன் டிவி சூப்பர் ஹிட் சீரியலில் நடித்துள்ளாரா! வைரலாகும் புகைப்படம்!

ராகவா லாரன்ஸ் மே 1-ஆம் தேதி தொழிலாளர் தினம் அன்று...  'மாற்றம்' என்கிற அறக்கட்டளை ஒன்றை துவங்கி அதன் மூலம் தன்னுடைய உதவியை... விரிவு படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் ராகவா லாரன்ஸ் யாருக்கு உதவ சொல்கிறாரோ அவருக்கு உதவ உள்ளதாக  அவரால் போடப்பட்ட விதைகளாக இருக்கும் இளைஞர்கள் பேசியுள்ள வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதை மிகவும் பெருமையாக நினைப்பதாக ராகவா லாரன்ஸ் பேசி வெளியிட்டுள்ள வீடியோவுக்கு பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Hi friends and fans,
A journey of my children's growth since 20 years who are now ready to serve others. Few of them are studying and working. At this young age, with a generous heart, They saved money from their part-time jobs and work salaries to wholeheartedly serve others.… pic.twitter.com/CdxhawQdcL

— Raghava Lawrence (@offl_Lawrence)

 

click me!