Saamaniyan: ஒருவழியா ராமராஜனின் 'சாமானியன்' படத்திற்கு விடிவு வந்தாச்சு! ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

Published : Apr 23, 2024, 02:32 PM IST
Saamaniyan: ஒருவழியா ராமராஜனின் 'சாமானியன்' படத்திற்கு விடிவு வந்தாச்சு! ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

சுருக்கம்

ராமராஜன் ஹீரோவாக நடித்துள்ள, 'சாமானியன்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.  

நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம் பிடித்து வந்த நடிகர் ராமராஜன், கடந்த 2022 ஆம் ஆண்டு சாமானியன் படத்தில் நடிக்க உள்ள தகவல் அதிகார பூர்வமாக வெளியானது. இந்த படத்தை மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, தம்பிக்கோட்டை, ஆகிய படங்களை இயக்கிய ஆர் ராகேஷ் இயக்கியுள்ளார். எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் இந்த படத்தை மதி அழகன் என்பவர் தயாரிக்கிறார். ராமராஜன் நடிக்கும் இப்படத்திற்கு கிட்டத்தட்ட 23 வருடங்களுக்குப் பிறகு இசையமைக்கிறார் இளையராஜா.

பல வருடங்களுக்குப் பிறகு ராமராஜன் அதிரடி ஆக்சன் கதைகளத்தில் உருவாகியுள்ள 'சாமானியன்' படத்தில் நடித்துள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. அதேபோல் இந்த படத்தின் டீசர், ட்ரைலர், போன்றவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Kayal: அட்ராசக்க 'கயல்' சீரியலில் இவ்வளவு நாள் ரசிகர்கள் எதிர்பார்த்த விஷயம் நடக்க போகிறது! எகிற போகும் TRP!

கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய இப்படம், 'சாமானியன்' என்ற தலைப்பு தனக்கு சொந்தமானது என வேறு ஒரு நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் ரிலீஸ் தேதி தாமதமாகி கொண்டே சென்றது. இதைத்தொடர்ந்து இந்த டைட்டில் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு சொந்தம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Gilli: 'கில்லி' படத்தில் தளபதிக்கு ஜோடியாக முதலில் நடிக்க இருந்தது நான் தான்? புலம்பி கொட்டும் கவர்ச்சி நடிகை!

பரபரப்பான கதையின் களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், கதாநாயகியாக நக்சா சரண் என்பவர் நடித்துள்ளார். மேலும் ராதாரவி, எம் எஸ் பாஸ்கர், ராஜா ராணி பாண்டியன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல், தற்போது வெளியாகி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாமானியன் திரைப்படம் மே 23ஆம் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!
கதறி அழும் விசாலாட்சி; ஆறுதல் சொல்லும் மருமகள்; குணசேகரின் கேம் இஸ் ஓவர் என்று பேசும் ஜனனி: எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்!