Actor Jai : சிறப்பான ரோலில் சத்யராஜ்.. மீண்டும் ஜெய்யுடன் இணைந்த யோகி பாபு - Baby & Baby பட லேட்டஸ்ட் அப்டேட்!

Ansgar R |  
Published : Apr 23, 2024, 01:20 PM IST
Actor Jai : சிறப்பான ரோலில் சத்யராஜ்.. மீண்டும் ஜெய்யுடன் இணைந்த யோகி பாபு - Baby & Baby பட லேட்டஸ்ட் அப்டேட்!

சுருக்கம்

Baby & Baby Movie : GPS Creations சார்பில் G.P. செல்வகுமார் தயாரிப்பில், Yuvaraj Films சார்பில் B. யுவராஜ், வெளியிட, நடிகர்கள் ஜெய், சத்யராஜ், யோகி பாபு நடிப்பில் உருவாகும் படம் தான் பேபி & பேபி.

அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், அழகான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் பேபி & பேபி. தமிழ் சினிமாவில் ரசிகர்கள் குடும்பங்களோடு இணைந்து ரசிக்கும் படங்கள் வருவது அரிதாகிவிட்டது. அந்த வகையில் குடும்ப உறவுகளின் பின்னணியில், குழந்தைகளை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

காமெடியும், எமோஷனும் சம அளவில் கலந்து ஒரு அசத்தலான ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் பிரதாப். இப்படத்தில் ஜெய் நாயகனாக நடிக்க, நடிகர் சத்யராஜ் திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார். யோகிபாபு மிக முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். நாளை தீர்ப்பு படத்தில், விஜய்யின் முதல் கதாநாயகியாகவும் மற்றும் பவித்ரா படத்தில் அஜித்தின் ஜோடியாகவும் நடித்த, நடிகை கீர்த்தனா செல்வகுமார் இப்படத்தில் ஜெய்யின் அம்மாவாகவும், நடிகர் சத்யராஜுக்கு ஜோடியாக மீண்டும் திரையில் களமிறங்கியுள்ளார். 

Inimel Album Song : ஹீரோவாக லோகேஷ்.. ஸ்ருதிஹாசனின் "இனிமேல்" ஆல்பம் - 10 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை!

நடிகை பிரக்யா நாக்ரா ஜெய் ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, சிங்கம்புலி, நிழல்கள் ரவி, கேபிஒய் ராமர், கேபிஒய் தங்கதுரை, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், சேசு ஆகியோர் இணைந்து நடிக்கின்றார்கள். மற்றொரு நாயகியாக புதுமுகம் சாய் தன்யா நடிக்கிறார். 

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு  பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு பகுதிகளில்  படமாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னை சுற்று வட்டார பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் படமாக்கப்பட்டு வருகிறது. GPS Creations சார்பில் G.P. செல்வகுமார் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார். 

T.P. சாரதி ஒளிப்பதிவு செய்கிறார். Yuvaraj Films சார்பில் B. யுவராஜ், தயாரிப்பாளர் G.P. செல்வகுமார் இணைந்து  இப்படத்தை வெளியிடுகிறார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.

Director Hari : தளபதிக்கு கதை ரெடியா இருக்கு... விஜய்யுடன் இணைவது குறித்து மனம் திறந்த இயக்குனர் ஹரி

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!