ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து புத்தம் புதிய போஸ்டர் வெளியானது!

Published : Apr 23, 2024, 06:37 PM IST
ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து புத்தம் புதிய போஸ்டர் வெளியானது!

சுருக்கம்

இயக்குனர் பிரசாந்த் வர்மா தன்னுடைய சினிமாடிக் யூனிவர்ஸில் இருந்து உருவாகும், ஹனுமான் படத்தின் தொடர்ச்சி குறித்த அறிவிப்பை புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளார்.  

பிரபல படைப்பாளி பிரசாந்த் வர்மா, பான் இந்திய அளவில் வெற்றி பெற்ற  ஹனுமான் படத்திற்குப் பிறகு, நாடு முழுவதும் கொண்டாடப்படும் இயக்குநராக மாறியுள்ளார். இந்நிலையில் பிரசாந்த் வர்மா  அவரது சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து (PVCU) மற்றொரு சாகச காவியத்தை ரசிகர்களுக்கு  கொண்டு வருகிறார். 

ஜெய் ஹனுமான் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஹனுமான் கதையின் ப்ரீக்வுலாக உருவாகவுள்ளது. , ஹனுமான் படத்தின் முடிவில் இப்படம்  அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் திரைக்கதை  ஏற்கனவே முழுமையாக தயாராகிவிட்டது.  இப்படம் மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிறது.  இப்படத்தில் முன்னணி  நட்சத்திர நடிகர்கள் நடிக்கவுள்ளனர்  மற்றும் பிரபலமான தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் முக்கியமான நாளில் படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளை தொடங்கிய இயக்குநர்,  ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். போஸ்டரில் ஹனுமான் ஒரு குன்றின் மீது கையில் சூலாயுதத்துடன் நிற்க, நெருப்பை கக்கும் டிராகன் பின்னணியில் இருப்பதைக் காணலாம், இப்படம் மூலம் பிரசாந்த் வர்மா முதல் முறையாக டிராகன்களை இந்திய திரைக்கு கொண்டு வருகிறார். உலகத்தரத்திலான VFX மற்றும் மிகச்சிறந்த தொழில்நுட்ப தரத்துடன், ரசிகர்களுக்கு இதுவரை இந்திய திரையுலகம் கண்டிராத அனுபவத்தை இப்படம் வழங்கும் என தெரிகிறது. 

ஜெய் ஹனுமான் திரைப்படம் ஐமேக்ஸ் 3டியில் வெளியாகவுள்ளது. இந்த மாபெரும் படைப்பு குறித்த மற்ற விவரங்கள்  விரைவில் வெளியாகும். மேலும் படக்குழு இன்று, ஹனுமான் படத்தின்  100 நாட்கள் நிறைவு விழாவினை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்