மரணம் அடைந்த தீவிர ரசிகர்... வீடுதேடிச் சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!

First Published Apr 24, 2024, 7:42 PM IST

'பொன்னியின் செல்வன்' படத்தின் ஹீரோவான நடிகர் ஜெயம் ரவி தனது ரசிகர் ராஜா மறைவுக்குப் பின், அவரது வீட்டுக்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

Actor Jayam Ravi

நடிகர் ஜெயம் ரவி தனது தீவிர ரசிகரான ராஜா உயிரிழந்ததை அடுத்த, அவரது வீட்டுக்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். அவர் ரசிகரின் வீட்டுக்குச் சென்றபோது எடுத்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

Actor Jayam Ravi

அண்ணன் மோகன் ராஜா இயக்கிய ஜெயம் படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் 'ஜெயம்' ரவி. மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்து தனது இரண்டாவது இன்னிங்கஸை தொடங்கி இருக்கிறார்.

Actor Jayam Ravi

இப்போது ஜெயம் ரவி மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர இன்னும் சில படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

Actor Jayam Ravi

இந்நிலையில், சென்னை எம் ஜி ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த ராஜாவின் வீட்டிக்கு ஜெயம் ரவி தீடீரென விசிட் செய்துள்ளார். ராஜா சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானதால், அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறச் சென்றுள்ளார்.

Actor Jayam Ravi

33 வயதான ராஜா ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் நற்பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

Actor Jayam Ravi

ராஜா உயிரிழந்ததை அறிந்த ஜெயம் ரவி, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். ராஜாவின் குடும்பத்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.

click me!