3000 கோடி சொத்தின் வாரிசு... இந்தியாவின் பணக்கார நெப்போ கிட் ஹீரோ யார் தெரியுமா?

First Published | Apr 24, 2024, 4:47 PM IST

ரூ.3,100 கோடி சொத்துக்களுடன் ராஜாவாக வாழும் ஒரு ஸ்டார் ஹீரோ... அந்த ஹீரோதான் இந்தியாவின் பணக்கார திரைப்பட வாரிசு... அவர் யார் தெரியுமா?

Hrithik Roshan Net worth

எந்த மொழியாக இருந்தாலும், சினிமா துறையில் நேபாட்டிசம் சகஜமாக உள்ளது. பல வருடங்களாக திரையுலகில் வாரிசுகள் ஆட்சி செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவிலும் வாசுகளுக்குக் குறைவில்லை. ஆனால், தெற்கை விட ஹிந்தியில் இந்த நேபோடிசம் அதிகம்.

Hrithik Roshan Family

குடும்பத்தின் செல்வாக்கை பயன்படுத்தி வெற்றி பெறும் இந்த வாரிசுகளை நெபோ கிட் என்று சொல்வார்கள். ஏறக்குறைய 3000 கோடி ரூபாய் சொத்துக்கு வாரிசாக இருக்கிறார் ஒரு பிரபல நெபோகிட் ஹீரோ. அவர் யார் தெரியுமா? அவர்தான் ஹிருத்திக் ரோஷன். 

Tap to resize

Hrithik Roshan Assets

ஹிருத்திக் ரோஷன் பிரபல பாலிவுட் ஹீரோ. இவரது தந்தை ராகேஷ் ரோஷன் பாலிவுட்டில் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகராக ஜொலித்தவர். தந்தையின் உதவியால் சினிமாவில் எளிதாக நுழைந்த ஹிருத்திக் ரோஷன், பல வெற்றி தோல்விகளை சந்தித்து பாலிவுட் ஸ்டாராக மாறினார்.

Hrithik Roshan Salary

தற்போது ஒரு படத்துக்கு ரூ.100 கோடி சம்பளம் வாங்குகிறார். ஹிருத்திக் ரோஷனின் நிகர சொத்து மதிப்பு ரூ.3100 கோடி. ஹிரித்திக் அதிகமாக சம்பாதிப்பதற்கு முக்கிய காரணம் அவரது வணிக நிறுவனம்தான். ஹிரித்திக், எச்ஆர்எக்ஸ் (HRX) என்ற விளையாட்டு ஆடை நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

Hrithik Roshan

ரூ.7300 கோடி மதிப்புள்ள எச்ஆர்எக்ஸ் (HRX) நிறுவனத்தின் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறார் ஹிருத்திக் ரோஷன். இது தவிர திரையுலகிலும் நடித்து சம்பாதித்து வருகிறார். தற்போது அவர் கையில் 2 படங்கள் உள்ளன. ஒரு படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Latest Videos

click me!