Ninaithen Vanthaai: பாராட்டிய எழில்... குழந்தை கடத்தலில் சுடரை சிக்க வைத்த மனோகரி! நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

First Published | Apr 23, 2024, 7:05 PM IST

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மனோகரி சுடர் என்று கூப்பிட்டு ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 
 

அதாவது, மனோகரி எதுக்கு சுடர்னு கூப்பிட்டாங்க என்று குழப்பத்தில் இருக்கிறாள் சுடர். இதனை தொடர்ந்து எழில் நீ சொன்ன மாதிரி 30 நாள் முடிந்து போச்சு. குழந்தைகளை நீ மாத்திட்ட என்று பாராட்டி நன்றி சொல்கிறான். 

அடுத்து மனோகரி கொடுத்த ஐடியா போல் வேலு குழந்தைகளை கடத்தும் பெண்ணான தமிழ் போட்டோவுக்கு பதிலாக சுடர் போட்டோவை மாற்றி வைத்து விடுகிறான். இதனையடுத்து போலீஸ் சுடரை தேடி எழில் வீட்டிற்கு வருகிறது, தமிழ்-னு ஒரு பொண்ணு இருக்காளே எங்கே என்று விசாரிக்க கனகவல்லி பதறுகிறாள், அவ நீங்க நினைக்கிற மாதிரி நல்லவள் கிடையாது. குழந்தைகளை கடத்துறவள் என்று சொல்ல ஷாக் ஆகிறாள். 

Sivakarthikeyan: தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டுவதற்கு வெயிட்டான தொகையை வாரி வழங்கிய சிவகார்த்திகேயன்!


மேலும் போலீஸ் இதுவரை அவ 80 குழந்தைகளுக்கு மேல் கடத்தி இருக்கா என்று சொல்ல கனகவல்லி அதிர்ச்சி அடைகிறாள். எழிலுக்கு போன் போட்டு கனகவல்லி நாம ஏமார்ந்துட்டோம் பா. அந்த தமிழ் நல்லவள் இல்ல, குழந்தைகளை கடத்துற கும்பலை சேர்ந்தவள் என்று சொல்றாங்க என்று அழுகிறாள். மனோகரி எழிலுக்கு போனை போட்டு நீ டிவி பார்க்கலயா? டிவியை பாரு என்று சொல்கிறாள். 

சுடர் குழந்தைகளுடன் வந்து கொண்டிருந்த காரை ரவுடிகள் சுற்றிவளைத்து குழந்தைகளை கடத்த முயற்சிக்க சுடர் குழந்தைகளை காப்பாற்றி ஒரு குடோனுக்குள் ஓடி ஒளிகிறாள். ரவுடிகள் ஒரு பக்கம், எழில் ஒரு பக்கம் குழந்தைகளை தேட போலீசும் சுடரை தேடி அலைகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Iswarya Menon: நடிகை ஐஸ்வர்யா மேனன் சன் டிவி சூப்பர் ஹிட் சீரியலில் நடித்துள்ளாரா! வைரலாகும் புகைப்படம்!

Latest Videos

click me!