தமிழ் சின்னத்திரையில் பிரபலமான முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து தனி இடத்தை பிடித்து வருகின்றன. மேலும் புத்தாண்டு, பொங்கல் போன்ற விடுமுறை நாட்களில் மேலும் சிறப்பான நிகழ்ச்சிகளையும் புத்தம் புதிய திரைப்படங்களையும் களமிறக்கி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது. அந்த வகையில் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி ஜீ தமிழில் என்னென்ன மாதிரியான நிகழ்ச்சிகள், சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணி வரை இயற்கையோடு இணைந்த வாழ்வு.. நடைமுறையா? கற்பனையா? என்ற தலைப்பில் சுகி சிவம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற உள்ளது. அடுத்ததாக காலை 9.30 மணிக்கு உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக பகவந் கேசரி என்ற திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த படத்தில் பாலகிருஷ்ணா, அர்ஜுன் பால், காஜல் அகர்வால், ஸ்ரீ லீலா, சரத்குமார், ஆடுகளம் நரேன் என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... Kichcha : சூப்பர் ஸ்டார் கிச்சா வீட்டில் நச்சுனு ஒரு விருந்து - காதல் கணவருடன் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார்!
இந்த படத்தை தொடர்ந்து மதியம் 1.30 மணி முதல் சந்தானம், மேகா ஆகாஷ், எம்.எஸ் பாஸ்கர், ஜான் விஜய், ரவிமரியா, நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி என்ற திரைப்படம் சின்னத்திரை வரலாற்றில் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது.