முத்துபாண்டிக்கு திருமணம்.. ஷண்முகத்துக்கு ஆப்பு வைக்க பாண்டியம்மா போடும் பலே பிளான் - அண்ணா சீரியல் அப்டேட்

First Published | Jan 19, 2024, 12:41 PM IST

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பாண்டியம்மா உடம்பு முடியாமல் சமைக்காமல் படுத்திருந்த பாக்கியத்தின் முடியை பிடித்து சண்டைக்கு போன நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna Serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாண்டியம்மா உடம்பு முடியாமல் சமைக்காமல் படுத்திருந்த பாக்கியத்தின் முடியை பிடித்து சண்டைக்கு போன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, பாக்கியம் பாண்டியம்மா முடியை பிடித்ததும் டேய் சிவபாலா அந்த அரிவாளை எடுத்து வந்து இவை கூந்தலை அறுடா என்று சொல்கிறாள். 

Zee Tamil Anna Serial

மேலும் நான் பழைய பாக்கியம்னு நினைசீங்களா என்று கோபப்பட சிவபாலன் என் அம்மா மேல இருந்து கையை எடுக்கறியா? இல்லையா? என்று மிரட்ட சௌந்தரபாண்டி ஓடி வந்த நீ நினைக்கிற மாதிரியெல்லாம் இவ இல்ல, இப்போ ரொம்ப மாறிட்டா, இவளை வேற மாதிரி தான் டீல் பண்ணனும் என அழைத்து செல்கிறார். இங்கே ஷண்முகம் வலியில் தூக்கம் வராமல் தவிக்க பரணி அவன் தூக்குவதற்கும் வலி குறைவதற்கும் ஊசி போட்டு விட ஷண்முகம் பரணியை அம்மா என நினைத்து உருக்கமாக பேசுகிறான். 

இதையும் படியுங்கள்... கபடி போட்டியில் கத்திக்குத்து வாங்கிய சண்முகம் உயிர் பிழைத்தாரா? அடுத்தடுத்த திருப்பங்களுடன் அண்ணா சீரியல்

Tap to resize

Anna Serial Update

உன் மடியில் படுத்துக்கட்டுமா என்று கேட்க பரணி சண்முகத்தை மடியில் சாய்த்து கொள்கிறாள். பிறகு ஷண்முகம் கண் திறக்காமல் அம்மா என நினைத்து நீ எப்பயும் என்னை விட்டு போக மாட்டானு சத்தியம் பண்ணு என கையை நீட்ட பரணியும் சத்யம் செய்ய வரும் போது ஷண்முகம் கையை கீழே போட்டு விடுகிறான். மறுநாள் காலையில் சௌந்தரபாண்டி, முத்துப்பாண்டி மற்றும் பாண்டியம்மா ஆகியோர் ஒன்று கூடி இருக்க பாண்டியம்மா முத்துபாண்டிக்கு ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று சொல்ல முத்துப்பாண்டி நான் ரத்னா கழுத்தில் தான் தாலியை கட்டுவேன் என்று சொல்கிறான். 

Anna Serial Today Episode

இதை கேட்ட பாண்டியம்மா முதல்ல ஒரு பொண்ணை பார்த்து கல்யாண ஏற்பாடுகளை கவனிப்போம். நாம மாறிட்டோம்னு நினைச்சிட்டு ஷண்முகம் குடும்பத்துல எல்லாரும் கல்யாணத்துக்கு வருவாங்க. கடைசி நேரத்துல ரத்னா கழுத்தில் தாலியை கட்டிடு, அப்புறம் அந்த ரத்னா தான் இந்த வீட்டு மருமகள், அதை யாராலும் மாற்ற முடியாது, இது தான் என்னுடைய பிளான் என்று சொல்ல முத்துப்பாண்டி சந்தோஷப்படுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... கத்தியுடன் கபடி போட்டியில் இறங்கிய ரவுடிகள்... தப்பித்தாரா ஷண்முகம்? அண்ணா சீரியலில் எதிர்பாரா திருப்பம்

Latest Videos

click me!