பொங்கல் வேலைகளை தீபா தலையில் கட்டிய அபிராமி... செய்து முடித்தாரா தீபா? - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

First Published | Jan 17, 2024, 1:31 PM IST

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் இந்த வருட பொங்கலுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியது தீபாவின் பொறுப்பு என கொத்து சாவியை அபிராமி தீபாவிடம் ஒப்படைத்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

Karthigai deepam serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் இந்த வருட பொங்கலுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியது தீபாவின் பொறுப்பு என கொத்து சாவியை அபிராமி தீபாவிடம் ஒப்படைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது அபிராமி வீட்டுக்கு பெயிண்ட் அடிப்பதற்காக ஆட்களை வர சொல்லி அவர்களுக்காக காத்திருக்க அபிராமிக்கு ஒரு போன் கால் வருகிறது. பெயிண்ட் அடிப்பவர்கள் காண்ட்ராக்டர் வீட்டில் வேலை இருப்பதால் இன்னைக்கு வர முடியாது என்று சொல்லிவிட அபிராமி டென்ஷன் ஆகிறார். 

zee tamil Karthigai deepam serial

பொங்கல் நெருங்கிடுச்சு இப்படி கடைசி நேரத்தில் வர முடியாதுன்னு சொன்னா யாரை வைத்து பெயிண்ட் அடிக்கிறது என சத்தம் போட தீபா ரூமுக்குள் சென்று பெயிண்டர் கெட்டப்பில் வெளியே வருகிறாள். இதைப் பார்த்து எல்லோரும் என்ன இது என்று கேட்க நாம எதிர்பார்த்த ஒரு விஷயம் நடக்கலனா நாமே களத்துல இறங்கிட வேண்டியது தான் என்று சொல்லி அருணாச்சலத்துடன் ஒரு துண்டை கொடுக்கிறாள். தீபா சொல்வதும் சரிதான் முன்னெல்லாம் நம்ம வீட்டுக்கு நாமளே தான் பெயிண்ட் அடிப்போம் இப்பவும் அதே மாதிரி பண்ணிட வேண்டியது தான் என்று சொல்ல ஐஸ்வர்யா நைசாக நழுவ பார்க்க மீனாட்சி இழுத்து கோர்த்து விடுகிறாள். 

இதையும் படியுங்கள்... கபடி போட்டியில் கத்திக்குத்து வாங்கிய சண்முகம் உயிர் பிழைத்தாரா? அடுத்தடுத்த திருப்பங்களுடன் அண்ணா சீரியல்

Tap to resize

Karthigai deepam serial Update

அதன் பிறகு எல்லோரும் பெயிண்ட் அடிக்க தொடங்க கார்த்திக் சூப்பர்வைசராக வேலை வாங்குகிறான். ஆனந்தும் மீனாட்சியும் ஒன்றாக சேர்ந்து பெயிண்ட் அடிக்கின்றனர். ஆனந்த் மீனாட்சியிடம் புருஷனை கவனிக்க மாட்டியா என்று ரொமான்டிக்காக பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து கார்த்திக் அங்கு வந்துவிட அதை கவனித்த மீனாட்சி கவனிச்சிட்டா போச்சு கண்ணை மூடுங்கள் என்று சொல்லி அங்கிருந்து எஸ்கேப் ஆக கார்த்திக் எதிரே வந்து நிற்க ஆனந்த் அதிர்ச்சி அடைகிறான். அண்ணே என்ன வேலை பண்ண சொன்னா என்ன வேலை பண்ணிட்டு இருக்கீங்க என கலாய்த்து கார்த்திக் அங்கிருந்து நகர்கிறான். 

Karthigai deepam serial Today Episode

பிறகு தீபா வீட்டின் பின்புறம் ஏணியில் ஏறி பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென ஸ்லிப்பாகி கீழே விழ போக கார்த்திக் தாங்கி பிடிக்கிறான்‌. இந்த நேரம் பார்த்து அங்கு வரும் ஆனந்த் என்னை சொல்லிட்டு இப்போ நீங்க என்ன தம்பி பண்றீங்க என்று கார்த்திக்கை கலாய்க்க ஹெல்ப் பண்றேன் என கூறுகிறார். பெயிண்ட் அடிக்கும் வேலை மொத்தமா சிறப்பாக நடந்து முடிய அண்ணாமலை அபிராமி முன்னாடி வைத்து தீபாவை பாராட்ட அபிராமி டென்ஷன் ஆகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... தம்மாத்தூண்டு ஏலியனுக்காக தீயாய் வேலை செய்துள்ள படக்குழு - பிரம்மிக்க வைக்கும் அயலான் மேக்கிங் வீடியோ இதோ

Latest Videos

click me!