தம்மாத்தூண்டு ஏலியனுக்காக தீயாய் வேலை செய்துள்ள படக்குழு - பிரம்மிக்க வைக்கும் அயலான் மேக்கிங் வீடியோ இதோ
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்தின் மிரட்டலான மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ள திரைப்படம் அயலான். இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார். கேஜேஆர் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஏலியனுக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவை மையமாக வைத்து சயின்ஸ் பிக்சன் பேண்டஸி திரைப்படமாக இதனை உருவாக்கி உள்ளனர்.
இப்படம் சுமார் 6 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின்னர் பொங்கலுக்கு திரைக்கு வந்துள்ளது. குழந்தைகளையும், பேமிலி ஆடியன்ஸையும் கவரும் விதமாக அமைந்துள்ள இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஐந்து நாட்களிலேயே ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்துள்ள அயலான், விரைவில் ரூ.100 கோடி என்கிற மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பொங்கல் ரேஸில் வெற்றி... அயலான் டீம் உடன் கோவை பட்டீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்
அயலான் படம் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனு, அயலான் படக்குழுவும் தியேட்டர்களுக்கு நேரடியாக விசிட் அடித்து ரசிகர்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று கோயம்புத்தூர், திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள திரையரங்குகளுக்கு சென்றிருந்தனர்.
இது ஒருபுறம் இருக்க அயலான் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டு உள்ளது. இப்படத்திற்காக தாங்கள் எதிர்கொண்ட சவால்கள் பற்றி நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ரவிக்குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, படத்தொகுப்பாளர் ரூபன், கலை இயக்குனர் முத்துராஜ் மற்றும் தயாரிப்பாளார் ராஜேஷ் ஆகியோர் விவரிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளது.
இதையும் படியுங்கள்... 65 வயது வரை ஐட்டம் டான்ஸ் ஆடி கோலிவுட்டை அதிரவிட்ட நடிகை! தமிழ் சினிமாவின் டாப் 10 ஐட்டம் டான்சர்ஸ் ஒரு பார்வை