ஐஸ்வர்யா செய்த தில்லுமுல்லு வேலை... அபிராமியிடம் வசமாக சிக்கிய தீபா - கார்த்திகை தீபம் சீரியல் டுவிஸ்ட்

First Published | Jan 18, 2024, 1:17 PM IST

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா உடன் எல்லாரும் சேர்ந்து பெயிண்ட் அடித்து முடித்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

Karthigai deepam serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா பெயிண்டர் வராத காரணத்தினால் வீட்டிற்கு நாமளே பெயிண்ட் பண்ணலாம் என்று ஐடியா கொடுக்க எல்லாரும் சேர்ந்து பெயிண்ட் அடித்து முடித்ததை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது எல்லாரும் போகி பண்டிகையை கொண்டாட தயாராக அபிராமியும் அருணாச்சலமும் கொளுத்துவதற்கு பழைய துணியை எடுக்கும் போது கல்யாண புடவையையும் சேர்த்து எடுக்க, அபிராமி அது நம்மோட கல்யாண புடவை, அதை நான் இத்தனை வருஷமா பத்திரமாக வச்சிருக்கேன் என்று வாங்கி உள்ளே வைக்க இதை ஐஸ்வர்யா பார்த்து விடுகிறாள். 

zee tamil Karthigai deepam serial

அடுத்து ஐஸ்வர்யா யாருக்கும் தெரியாமல் அந்த கல்யாண புடவையை எடுத்து தீபா சேகரித்து வைத்துள்ள துணிகளுக்கு அடியில் போட்டு விடுகிறாள். பிறகு எல்லாரும் போகியை கொண்டாட ஒன்று சேர தீபா போகி பண்டிகை அன்று பழைய துணிகளை எரிப்பது போல் நம்ம மனசுல இருக்கிற தீய எண்ணங்களையும் எரித்து விட வேண்டும் என்று பண்டிகை குறித்து விவரித்து பேச, அபிராமி அப்போ நாங்க எல்லாம் நல்லவங்க இல்லைனு சொல்றியா என்று கோபப்படுகிறாள். 

இதையும் படியுங்கள்... சினிமா ஹீரோயினை உருகி உருகி காதலிக்கும் விஜய் டிவி சீரியல் ஹீரோ... விரைவில் டும்டும்டும்

Tap to resize

Karthigai deepam serial Update

தீபா நான் அப்படி சொல்லல அத்தை, அந்த பண்டிகை பற்றி தான் சொன்னேன் என்று புரிய வைக்க முயற்சி செய்கிறாள். அருணாச்சலமும் தீபா ஒன்றும் தப்பா சொல்லலையே என்று சப்போர்ட் செய்து பேசுகிறார். பிறகு ஆடைகளை எரிக்க தொடங்க அபிராமியின் கல்யாண புடவை உள்ளே கிடப்பதை பார்த்து அபிராமி தீபாவிடம் நீ வேணும்னு தானே இப்படி பண்ண என்று சண்டையிடுகிறாள். 

Karthigai deepam serial Today Episode

தீபா நீங்க கொடுத்த டிரஸ் தான் எல்லாமே என்று சொல்கிறாள். ஆனாலும் அபிராமி அதை புரிந்து கொள்ளாமல் சத்தம் போட அருணாச்சலம் அதை தீபா கொண்டு வரல, இதுல வேற ஏதோ நடந்திருக்கு என்று சொல்லி தீபாவை காப்பாற்ற, தீபா அருணாச்சலத்திற்கு நன்றி சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... விஜய் டிவியின் சூப்பர் ஹிட் தொடர்.. 'சிறகடிக்க ஆசை' சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சன் டிவி பிரபலம்!

Latest Videos

click me!