Sandhya Raagam: லவ் டார்ச்சர் செய்யும் சீனு, கடுப்பான சாரு! மாயா கொடுத்த ஷாக் - சந்தியா ராகம் இன்றைய அப்டேட்!

Published : Mar 23, 2024, 05:04 PM ISTUpdated : Mar 23, 2024, 05:05 PM IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தனம் அப்பாவை பற்றி தப்பாக சொன்ன ஜானகி கோபப்பட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

PREV
14
Sandhya Raagam: லவ் டார்ச்சர் செய்யும் சீனு, கடுப்பான சாரு! மாயா கொடுத்த ஷாக் - சந்தியா ராகம் இன்றைய அப்டேட்!

அதாவது மாயா மற்றும் தனம் என இருவரும் காலேஜுக்கு ரெடியாகிக் கொண்டிருக்க அங்கு வரும் சீனு ரெடியாகி ஆச்சா என்று கேட்கிறான். மேலே சீனு குடிசைக்குள் முதல்முறையாக மாயாவை பார்த்ததும் மாயா தன்னை பார்த்த விஷயத்தை சொல்லி அவளை கலாய்க்க மாயா கடுப்பாகிறாள். 
 

24

அது மட்டுமில்லாமல் சீனு நாள் முழுவதும் மாயாவை நீ என் முறை பொண்ணு என சொல்லி வேலை வாங்கிக் கொண்டே இருக்க மாயா பயங்கர கடுப்பாகிறாள். சீனு இப்படி நடந்து கொள்வதை பார்த்து சாருவும் கடுப்பாகி அவனை கூப்பிட்டு நீ ஏன் மாயா கிட்ட இவ்வளவு க்ளோசா இருக்க? உன்ன கட்டிக்க போறேன் என்கிட்ட இப்படி இருக்க மாட்ற என கேள்வி கேட்கிறாள். 

கேரள ரசிகர்களின் அன்பு மழையில் இருந்து விடைபெற்று சென்னை திரும்பினார் தளபதி விஜய்! Airport வீடியோ வைரல்!

34

சீனு உனக்கு பிடிச்சதெல்லாம் எனக்கு பிடிக்கும்னு அவசியம் கிடையாது அதே மாதிரி எனக்கு பிடிச்சதெல்லாம் உனக்கு பிடிக்கனும்னு எந்த கட்டாயமும் கிடையாது என பதிலடி கொடுக்கிறான். இந்த சமயத்தில் அங்கு வரும் மாயா தன்னை ட்ராப் செய்ய சொல்ல சாரு போகக்கூடாது நீ என்னுடைய ஃப்யூச்சர் ஹஸ்பண்ட் என சொல்கிறாள். 

44

இதனால் கோபமாக சீனு அதுக்கான உரிமை உனக்கு கிடையாது நீ இன்னும் எனக்கு பொண்டாட்டியாகல என சொல்லி அவளது கையை உதறி தள்ளிவிட்டு மாயாவை அழைத்துக் கொண்டு கிளம்புகிறான். ஜாலியாக பைக் ஓட்டிச் செல்ல மாயா பயங்கர கடுப்பில் வர ஒரு இடத்தில் வண்டியை நிறுத்த சொல்லி நீ டபுள் கேம் விளையாடுற, சாருவோட உனக்கு நிச்சயம் முடிஞ்சிடுச்சு அப்படி இருக்கும்போது என் பின்னாடி எதுக்கு சுத்துற? நீ பிட்டே கிடையாது என அவனை காயப்படுத்தி அங்கிருந்து நடந்து செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Famous TV Actors: ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் டாப் 5 சீரியல் பிரபலங்கள் யார் யார் தெரியுமா? Ormax தகவல்!
 

click me!

Recommended Stories