கேரள ரசிகர்களின் அன்பு மழையில் இருந்து விடைபெற்று சென்னை திரும்பினார் தளபதி விஜய்! Airport வீடியோ வைரல்!

தளபதி விஜய் கடந்த ஒரு வாரமாக கேரளாவில் நடந்த 'கோட்' படபிடிப்பில் கலந்து கொண்ட நிலையில்,  இன்று சென்னை திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 

goat Shooting wrapped in kerala vijay return to chennai video goes viral mma

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் 'கோட்'. இந்த படத்தின் படபிடிப்பு அமெரிக்காவில் துவங்கி, ஹைதராபாத், சென்னை, புதுச்சேரி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்டது. மேலும் தளபதி விஜய்யின் படப்பிடிப்பு நடக்கிறது என்று அறிந்ததுமே, ரசிகர்கள் படப்பிடிப்பு நடந்த இடங்களில் கூட அவர் மீதான அன்பை வெளிப்படுத்தினர்.  தளபதி விஜயும் நேரம் கிடைக்கும் போதெல்லாம், ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு வெளியேறி ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் பேசியது மட்டுமின்றி, செல்பியும் எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த வாரம் 'கோட்' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புக்காக விஜய் மற்றும் பட குழுவினர் அனைவரும் கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு சென்றனர். திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 'கோட்' படப்பிடிப்பில், தளபதி விஜய் பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். தளபதி விஜய்யும் படபிடிப்பை முடித்துவிட்டு, நேரம் கிடைக்கும்போதெல்லாம் ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

goat Shooting wrapped in kerala vijay return to chennai video goes viral mma

'பாண்டியன் ஸ்டோர் 2' சீரியலில் மூத்த மருமகள் இவங்க தானா? நான்கு வருடத்திற்கு பின் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை!

அவ்வபோது விஜய் ரசிகர்களை சந்திக்கும் போது எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்திலும் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து கோட் படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் கேரள மாநிலத்தில் முடிவடைந்த நிலையில், தளபதி விஜய் திருவனந்தபுரத்தில் இருந்து விமான வழியாக சென்னை திரும்பியுள்ளார். 

அதற்கு விமான நிலையம் மும்பு திரண்ட தன்னுடைய ரசிகர்களை சந்தித்த போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் ஏர்போர்ட்டில் நடந்து செல்லும் போது எடுக்கப்பட்ட  வீடியோக்கள் வைரலாகி வருகிறது. 

 

 

தளபதி விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்கிற புதிய கட்சியை துவங்கி அரசியலில் இறங்குவதை உறுதி செய்துள்ள நிலையில், அடுத்ததாக நடிக்க உள்ள படம் தான் தன்னுடைய கடைசி படம் என தெரிவித்துள்ளார். மேலும் விஜய் அரசியல் அறிவிப்புக்கு பின்னர்... அவருக்கு ரசிகர்கள் பலர் அதிகரித்துள்ளதாகவே பார்க்கப்படும் நிலையில், தளபதி தமிழகத்தில் மட்டும் அல்ல, கேரளாவில் போட்டியிட்டாலும் வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம் என கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.
'அலைபாயுதே' படத்தில் ஷாலினிக்கு முன் ஹீரோயினாக நடிக்க இருந்தது இந்த பாடகியா? யாருனு தெரிஞ்சா அசந்துடுவீங்க!

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios