'பாண்டியன் ஸ்டோர் 2' சீரியலில் மூத்த மருமகள் இவங்க தானா? நான்கு வருடத்திற்கு பின் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை!
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'பாண்டியன் 2' சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ள புதிய நாயகி பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் டிவி தொலைக்காட்சியில், 2018 ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டுவரை ஒளிபரப்பான சீரியல் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. நான்கு அண்ணன் - தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல், வெற்றிகரமாக 5 வருடங்கள் ஓடியது. இந்த தொடர் TRP-யில் டல்லடிக்க துவங்கியதும், சீரியலை முடிக்க திட்டமிட்ட சீரியல் குழு, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாம் பாகத்தை அதிரடியாக அறிவித்தது.
அதன்படி தற்போது, 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. என்கிற தொடர் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்து வந்த ஸ்டாலின் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க, இவருக்கு ஜோடியாக நடிகை நிரோஷா நடித்து வருகிறார். மேலும் ஆகாஷ் பிரேம்குமார், வி.ஜே.கதிரவன் கந்தசாமி, ஹேமா ராஜ்குமார், ஷாலினி, சத்ய சாய் கிருஷ்ணா, விலாசினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
சிறுவயதில் இருந்தே அப்பா கிழித்த கோட்டை தாண்டாமல் வளர்க்கப்படும் பிள்ளைகள்... தங்களின் வாழ்க்கை என வரும் போது, அப்பா பேச்சை மீறி முடிவு செய்கின்றனர். குறிப்பாக கதிரின் திருமணம்... ராஜி ஊர்வாயில் சிக்க கூடாது என்று, கோமதி சுயநலமாக யோசித்து முடிவு செய்கிறார். தற்போது வரை ராஜு மற்றும் கதிருக்கு ஒத்து வரவில்லை என்றாலும், இதற்கு மேல் இருவருக்கும் இடையே நிறைவு ரொமான்டிக் சீன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாண்டியனின் மூத்த மகனான சரவணனை பற்றி யோசிக்காமல்... அவருக்கு அடுத்தடுத்து பிறந்த இரண்டு மகன்களும் திருமணம் செய்துகொண்ட நிலையில், மூத்தவனான சரவணனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறார் பாண்டியன். அதே நேரம்... ராஜியின் குடும்பம் பாண்டியன் வீட்டில் எந்த ஒரு நல்ல விஷயம் நடக்க கூடாது என்பதில் குறியாக உள்ளனர்.
இந்நிலையில், பாண்டியனின் மூத்த பையனான.. சரவணனுக்கு ஜோடியாக நடிகை சரண்யா துரடி நடிக்க உள்ளார். இவர் கடைசியாக... விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆயுத எழுத்து சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து திருமணம் செய்து கொண்டார். தற்போது திருமணத்திற்கு பின்னர் மீண்டும், 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சரண்யாவின் ரீ-என்ட்ரிக்கு பல ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.