ப்பா... கண்ணாடி முன் அமர்ந்து... கவர்ச்சி உடையில் கால் அழகை காட்டிய குட்டி நயன் அனிகா! வைரலாகும் போட்டோஸ்!

First Published Dec 9, 2022, 6:03 PM IST

18 வயது நிரம்பியதும், விதவிதமான கவர்ச்சி உடையில்... ரசிகர்களை கவர்ந்து வரும் அனிகா சுரேந்தரன் கண்ணாடி முன் அமர்ந்து வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.
 

கேரள பைங்கிளியான, அனிகா சுரேந்திரன், தமிழில்... இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான  'என்னை அறிந்தால்' திரைப்படத்தில், த்ரிஷா - அஜித்துக்கு மகளாக நடித்ததால் மிகவும் பிரபலமானார். குறிப்பாக அஜித் - அனிகா இடையே இருந்த தந்தை மகள் பாசம் அதிகம் ரசிகர்களை கவர்ந்ததால் இவரை அஜித்தின் ரீல் மகள் என்கிற அடையாளத்தையும் பெற்றார்.
 

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும், அஜித் - நயன்தாராவின் மகளாக, 'விஸ்வாசம்' படத்தில் நடித்தார். வழக்கம் போல் இந்த படத்திலும், அப்பா - மகள் பாசத்தை வெளிப்படுத்தி சென்டிமெண்டாக ரசிகர்கள் மனதை டச் செய்தனர். சிறு வயதிலேயே மிகவும் எதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தும் இவரது திறமை ரசிகர்கள் மத்தியில் பாராட்ட பட்டது.
 

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் மகளை சந்தித்த ராபர்ட் மாஸ்டர்! வைரலாகும் புகைப்படம்..!

இவர் மலையாள திரையுலகை சேர்ந்தவர் என்றாலும், ஒரு குழந்தை நட்சத்திரமாக அனிகாவுக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது என்றால், அது தமிழ் திரையுலகம் தான். திரைப்படங்களை தாண்டி... அனிகா நடித்த குறும்படமான 'மா' மற்றும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸானா 'குயின்' போன்றவை அனிகாவின் நடிப்பு பசிக்கு தீனி போடும் வகையில் அமைந்தது.

தற்போது 18 வயதை எட்டியுள்ள அனிகா... தெலுங்கில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து தமிழில், 'வாசுவின் கர்ப்பிணிகள்' என்கிற படத்தில் கர்பமாக இருக்கும் பெண்ணாக நடித்துள்ளார். 

எளிமையாக நடந்த நடிகை ஹரி பிரியா - வசிஷ்டா சிம்ஹாவுக்கு நடந்த நிச்சயதார்த்தம்! வைரலாகும் வீடியோ..!

சமூக வலைதளத்தில் படு ஆக்டிவாக இருக்கும் அனிகா அவ்வப்போது ரசிகர்களை கவரும் விதமாக விதவிதமான போட்டோ ஷூட் செய்து அதன் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், கருப்பு நிற கவர்ச்சி உடையில்... கண்ணை கவரும் அழகில் கால் அழகை காட்டியபடி இவர் எடுத்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

பிரபல நடிகருடன் அர்ஜுன் பட ஹீரோயின் ஹரி பிரியாவிற்கு நடந்த நிச்சயதார்த்தம்! வெளியான புகைப்படங்கள்!

click me!