Kiran Rathod : கண்ணாடி முன் அரைநிர்வாண போஸ் கொடுத்த கிரண்... போட்டோ பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்

First Published Jun 24, 2022, 11:30 AM IST

Kiran Rathod : மேலாடை எதுவும் அணியாமல் அரை நிர்வாணமாக கண்ணாடி முன் நின்று உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து அதன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகை கிரண். 

விக்ரம் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு ரிலீசான ஜெமினி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண். வட மாநிலத்தை சேர்ந்த இவர் இப்படத்திலும் வட மாநில பெண்ணாகவே நடித்திருந்தார். இப்படம் ஹிட் ஆனதை அடுத்து தமிழ் சினிமாவில் நடிகை கிரணுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின.

இதையடுத்து அஜித்துடன் வில்லன், கமலுடன் அன்பே சிவம் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த கிரண், சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான வின்னர் படத்தின் மூலம் கிளாமர் அவதாரம் எடுத்தார். இப்படத்தில் படு கவர்ச்சியாக நடித்ததால் இவருக்கு கோலிவுட்டில் மவுசு அதிகரித்தது.

முன்னணி நடிகையாக இருந்தபோதும், ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படி சரத்குமாரின் அரசு, விஜய்யின் திருமலை, அர்ஜுனின் சின்னா, விஷாலின் திமிரு, ராகவா லாரன்ஸின் ராஜாதி ராஜா என ஏராளமான முன்னணி நடிகர்களின் படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடி ரசிகர்களை கவர்ந்தார்.

இவ்வாறு பாப்புலராக இருந்த கிரண், உடல் எடை கூடியதன் காரணமாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இன்றி கடந்த சில ஆண்டுகளாக தவித்து வந்தார். தற்போது 41 வயதாகும் கிரண் ஆன்லைனின் ஆஃப் ஒன்றை தொடங்கி அதன்மூலம் காசு கொடுப்பவர்களுக்கு தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அனுப்பி கல்லாகட்டி வருகிறார்.

இதுதவிர சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் கிரண் அதிலும் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மேலாடை எதுவும் அணியாமல் அரை நிர்வாணமாக கண்ணாடி முன் நின்று உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து அதன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... ஒரே தினத்தில் பிறந்து திரையிசையில் பல மாயாஜாலங்களை செய்த எம்.எஸ்.வி - கண்ணதாசன் கூட்டணியை மறக்க முடியுமா...!

click me!