29 லட்சம் மோசடி... சன்னி லியோனை கைது செய்ய அதிரடி தடை போட்ட உயர் நீதிமன்றம்..!

First Published Feb 10, 2021, 12:20 PM IST

நடிகை சன்னி லியோன், கடைதிறப்பு விழாவில் கலந்து கொள்வதாக கூறி, 29 லட்சம் பெற்று கொண்டு மோசடி செய்துவிட்டதாக ஷியாஸ் என்பவர் தொடுத்த வழக்கில், சன்னி லியோனை கைது செய்ய தடை விதித்துள்ளது கேரள உயர்நீதிமன்றம்.
 

பாலிவுட் திரையுலகில் பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்து, ரசிகர்களை கிறங்கடித்துள்ள நடிகை சன்னி லியோன், தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
undefined
பாலிவுட் திரையுலகில் பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்து, ரசிகர்களை கிறங்கடித்துள்ள நடிகை சன்னி லியோன், தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
undefined
இந்நிலையில் இவர் மலையாளத்தில் மம்முட்டி நடித்திருந்த 'மதுர ராஜா' படத்தில் ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனமாடி இருந்ததால், இவருக்கு மலையாள திரையுலகிலும் ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது.
undefined
எனவே ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும், கேரளாவை சுற்றி பார்க்கவும், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் சன்னி லியோன் கேரளா வந்துள்ளார்.
undefined
அப்போது, கொச்சியில் உள்ள துணிக்கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ளும்படி, எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூரை சேர்ந்த ஷியாஸ் என்பவர் 29 லட்சம் பணம் கொடுத்துள்ளார். பணத்தை மற்றும் பெற்று கொண்ட சன்னி லியோன், துணிக்கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.
undefined
இதை தொடர்ந்து கேரள டிஜிபியிடம். ஷியாஸ் நடிகை சன்னி லியோன் தன்னிடம் 29 லட்சம் பெற்று கொண்டு, மோசடி செய்து விட்டதாக பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். இதுகுறித்து சன்னி லியோனிடம் உரிய விசாரணை நடத்த கூறி கேரள டிஜிபி கொச்சி குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டார்.
undefined
சன்னி லியோன் 29 லட்சம் நிதி மோசடி தொடர்பாக தொடர்ந்த வழக்கில், நடிகை சன்னி லியோனை கைது செய்ய குற்றப்பிரிவு போலீசாருக்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நடிகையின் முன் ஜாமீன் மனுவை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது.
undefined
click me!