Asianet News TamilAsianet News Tamil

இத்தாலியில் உயிரிழப்புகள் அதிகரிக்க இதுதான் காரணம் ...!! இத்தாலி மருத்துவரே கூறிய அதிர்ச்சி..!!


ஜப்பானுக்கு அடுத்தபடியாக முதியவர்கள் அதிகம் கொண்ட நாடாக இத்தாலி உள்ளது.  கொரோனாவால் பாதித்து உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 78 வயதை கடந்தவர்கள் ஆவர்

why death rate increasing in Italy only - Italy doctor says
Author
Delhi, First Published Mar 30, 2020, 6:14 PM IST

கொரோனா வைரஸ் உலகளவில் வேகமாக பரவி வரும் நிலையில் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 23 ஆக உயர்ந்துள்ளது .  இது ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது . அமெரிக்கா சீனா ஜப்பான் தென் தென்கொரியா ஈரான் என பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தீவிரம் காட்டி வரும் நிலையில் , இத்தாலியில் மட்டும் ஏன் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் செல்கிறது என்ற கேள்வி  அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது .  இத்தாலியில் தொடர் உயிரிழப்புகளுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது .  இத்தாலியில் இதுவரையில் 92 ஆயிரத்து 472 பேருக்கு வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சீனாவையே இத்தாலி ஒத்துள்ளது .  சீனாவில் 81 ஆயிரத்து 973 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர் ,  இத்தாலியிலும் அதே  நிலைமைதான் ஆனால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைவிட சீனாவில் மூன்று மடங்கு அதிகம். 

why death rate increasing in Italy only - Italy doctor says

இந்நிலையில் அமெரிக்காவில் ஒரு லட்சத்தி 5 ஆயிரத்து 470 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது .  இந்நிலையில் நோய் தொற்றில்  அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இத்தாலி உள்ளது ஆனால் நோய் தொற்று அதிகமாக உள்ள அமெரிக்காவை காட்டிலும் இத்தாலியில்  இறந்தவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகமாக உள்ளது.  ஆனால் வைரஸின் ஆறாவது நிலைக்கு எட்டியிருக்கும் இத்தாலியில் மட்டும் ஏன் இவ்வளவு உயிரிழப்பு என்ற கேள்வி சர்வதேச சமூகத்தில் எழுந்துள்ள கேள்விக்கு பல்வேறு தரவுகள் பதில் அளிக்கின்றன.  அதாவது ,    இத்தாலியில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது அதிக முதியோர்களை கொண்ட நாடாக இத்தாலி உள்ளது இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் இத்தாலியின்  சாக்கோ மருத்துவமனையின் தொற்றுநோய் பிரிவின் தலைவர் டாக்டர் மாசிமோ கல்லி,  இத்தாலியில் அனைவருக்கும் சோதனை நடத்தப்படுவதில்லை ,   மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே சோதனை நடத்தப்படுகிறது இதனால் நோயின் தீவிரம் அதிகமான பின்னரே சிகிச்சையும் வழங்கப்படுகிறது. இதனால்  மரணத்தை இத்தாலியால் கட்டுபடுத்தப்பட முடியவில்லை 

why death rate increasing in Italy only - Italy doctor says

அதேபோல் குறைந்த அளவிலான பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்கப்படுவதாக சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.  மற்ற நாடுகளில் நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு அம்சங்கள்  கடுமையாக பின்பற்றப்படுகின்றன .  அதேபோல மருத்துவ வசதிகளும் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இத்தாலியில் மிகக் குறைவு,  இத்தாலியில்  முதியோர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது இதனால் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.  ஜப்பானுக்கு அடுத்தபடியாக முதியவர்கள் அதிகம் கொண்ட நாடாக இத்தாலி உள்ளது.  கொரோனாவால் பாதித்து உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 78 வயதை கடந்தவர்கள் ஆவர் இத்தாலியின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது ஏற்கனவே பல்வேறு உபாதைகளுக்கு மருந்து எடுத்துவரும் முதியவர்கள் கொரோனா தாக்குதலுக்குப்பின்னர் உயிரிழந்து வருவதாக கூறினார் . வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் முதியவர்கள் உயிரிழக்கின்றனர்.   அதேபோல வைரஸ் கிருமிகளை தடுப்பதில் மற்ற நாடுகளைப்போல  போதுமான கட்டுப்பாடுகள் இத்தாலியில் இல்லை சீனாவில் நடத்தப்பட்ட முழு அடைப்பு ,  மற்றும் போக்குவரத்து சேவை ரத்து,  விமான சேவை ரயில் சேவை நிறுத்தம் போன்று இத்தாலியில் இல்லை... ஆனால் பாதிப்பு அதிகமாவதை உணர்ந்த பின்னரே பாதுகாப்பு நடவடிக்கைகள் மெல்ல மெல்ல எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.  

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios