வலுப்பெறும் ஈரான் போராட்டம்.. தலைமுடியை வெட்டி ஆதரவு கொடுத்த பிரபல துருக்கி பாடகி.. வைரல் வீடியோ
துருக்கியின் பிரபல பாடகி மேலக் மொஸ்கா தனது முடியை வெட்டி, ஹிஜாப் எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஈரானில் தெஹ்ரானில் 22 வயது மாஷா அமினி எனும் பெண், ஹிஜாப் ஒழுங்காக அணிந்துவரவில்லை என்று நன்னெறி பிரிவு காவலர்களால் தாக்கப்பட்டதில், பலத்த காயமடைந்து கோமா நிலைக்கு சென்று கடந்த 17ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து தற்போது ஈரான் முழுவதும் ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன. பெண்கள் தங்களது முடிகளை வெட்டியும், ஹிஜாபை தீயிட்டு எரித்தும் எதிர்ப்பை வெளிபடுத்தி வருகின்றனர்.
ஈரானில் தெஹ்ரானில் ஆரம்பித்த போராட்டம் தற்போது 46 நகரங்களில் பரவியுள்ளது. நகரம் முதல் கிராமம் வரை பெண்கள் போராட்டம் தீவிரமடைந்த உள்ள நிலையில், உலகில் பல்வேறு நாடுகளிலும் இளம்பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு , ஹிஜாப் எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க:சிறை எப்படி இருக்கும்..? பார்க்க ஆசையா இருக்கா..? ஒரு இரவுக்கு ரூ.500.. புதிய சுற்றுலா திட்டம்
இதனிடயே ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் 75 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிரபல துருக்கி பாடகி மெலெக் மோசோ ஹிஜாப் எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நேற்று கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட இவர், பாடி முடித்த பின்னர், மேடையிலேயே தனது முடியை வெட்டி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ராய்சி கடந்த ஜுலை 5 ஆம் தேதி பெண்கள் உடை அணிவது குறித்த புதிய சட்டத்தை செயல்படுத்தினார். ஷரியா சட்டம் படி, 7 வயதிற்கு மேலுள்ள பெண் அனைவரும் முடி, முகம் மற்றும் உடல் முழுவதையும் மறைக்கும் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப்பை கட்டாயமாக அணிய வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது அபராதம் போடப்படும் அல்லது காவல்துறையினரால் கைது செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:கருக்கலைப்பு செய்ய கணவனின் அனுமதி தேவையில்லை.. கேரள உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு.