ஜெயிலுக்கு போகனுமுனு ஆசையா இருக்கா..? ஒரு இரவுக்கு ரூ.500.. புதிய சுற்றுலா திட்டம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு, சிறை அனுபவத்தை காட்டும் வகையில் வித்தியசமான புதிய திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.
சுற்றுலா நகரமான ஹல்த்வானி நிர்வாகம், சிறையில் தங்கி அதன் அனுபவத்தை பெற்றுக் கொள்ள விரும்பும் சுற்றுலா பயணிகளுக்காக இந்த தனித்துவமான முன்முயற்சியை எடுத்துள்ளது.
மேலும் படிக்க:1 pfi banned for 5 years:பிஎப்ஐ, துணை அமைப்புகளின் இணையதளம், சமூக வலைத்தளங்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி
ஒர் இரவுக்கு ரூ.500 செலுத்தி, விருப்பமுள்ள பயணிகள் சிறையில் தங்கிக்கொள்ளலாம். இதற்காக சிறையில் கைவிடப்பட்ட பகுதிகள், சுற்றுலா பயணிகள் தங்கும் வகையில் மாதிரி சிறைவளாகமாக புதுப்பிக்கப்படுகிறது.ஹல்த்வானி சிறை நிர்வாகம் இதற்கான முன்னெடுப்புகளை செய்து வருகிறது. சிறையின் அனுபவத்தை பெறுவதின் மூலம் தனிநபர் குற்றங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் குறையும் என்று சொல்லப்படுகிறது.
ஜோசியத்தில் கட்டம் சரியில்லாதவர்கள், கண்டிப்பாக சிறைக்கு சென்றே தீர வேண்டும் என விதி இருப்பவர்கள் இந்த சிறைத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1903 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான ஹல்த்வானி சிறையில் கைவிடப்பட்ட ஆயுத கிடங்கு உள்ளிட்ட இடங்கள், சுற்றுலா திட்டத்திற்காக புதுப்பிக்கபடுகிறது.
சுற்றுலா பயணிகளுக்கு கைதிகள் அணியும் சீருடையும் சிறையில் சமைக்கப்படும் உணவும் வழங்கப்படும் என்று சிறை துணை கண்காணிப்பாளர் சதீஷ் சுகிஜா தெரிவித்துள்ளார்
மேலும் படிக்க:1 pfi ban notification: பிஎப்ஐ தடை: எந்தெந்த மாநில முதல்வர்கள் வரவேற்பு தெரியுமா?