1 pfi banned for 5 years:பிஎப்ஐ, துணை அமைப்புகளின் இணையதளம், சமூக வலைத்தளங்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடைவிதித்துள்ள நிலையில் அந்தஅமைப்புகளின் இணையதளம், சமூக ஊடகக் கணக்குகள், யூடியூப் அனைத்தையும் முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடைவிதித்துள்ள நிலையில் அந்தஅமைப்புகளின் இணையதளம், சமூக ஊடகக் கணக்குகள், யூடியூப் அனைத்தையும் முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
தீவிரவாத செயல்களுக்கு துணை செய்தல், நிதி திரட்டுதல் ஆகியவற்றில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, 19 மாநிலங்களில் என்ஐஏ அமைப்பினர் இரு கட்டங்களாக பிஎப்ஐ அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தி 200க்கும் மேற்பட்ட பிஎப்ஐ அமைப்பினர், அது தொடர்பான அமைப்பைச் சேர்ந்தவர்கள், தொடர்புள்ளவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பிஎப்ஐ தடை: எந்தெந்த மாநில முதல்வர்கள் வரவேற்பு தெரியுமா?
இந்நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதுசார்ந்த 8 துணை அமைப்புகளுக்கு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, “ பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் துணை அணைப்புகளாக ரிஹாப் இந்தியா பவுண்டேஷன்(ஆர்ஐஎப்)தேசிய மனித உரிமைகளுக்கான கூட்டமைப்பு(என்சிஹெச்ஆர்ஓ), தேசிய பெண்கள் முன்னணி, ஜூனியர் பிரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேஷன், அனைத்து இந்திய இஸ்லாமிக் கவுன்சில்(ஏஐஐசி), கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா(சிஎப்ஐ) ஆகிய அமைப்புகளுக்கும்” சட்டவிரோத செயல்கள் தடைச் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிஎப்ஐ, ரிஹாப் இந்தியா பவுண்டேஷன், கேம்பஸ் பிரன்ட் ஆப் இந்தியா, அனைத்து இந்தியா இஸ்லாமிய கவுன்சில் உள்ளிட்ட 8 அமைப்புகளின் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் சேனல்கள், இணையதளம், உள்ளிட்ட ஆன்-லைனில் இருக்கும் அனைத்து செயல்பாடுகளையும் முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பிஎப்ஐக்கு தடை: 2 ஆண்டுக்கு முன்பே சொன்னேன்! அஜ்மீர் தர்ஹா தலைவர் வரவேற்பு
பிஎப்ஐ, ரிஹாப் இந்தியா பவுண்டேஷன், அனைத்து இந்தியா இஸ்லாமிய கவுன்சில் இணையதளங்கள் முடக்கப்பட்டநிலையில் மற்ற அமைப்புகளும் முடக்கும் முயற்சியில் மத்திய தொலைத்தொடர்புத்துறை ஈடுபட்டு வருகிறது என்று மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
அதுமட்டுமல்லாமல் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் பிஎப்ஐ மற்றும் அது சார்ந்த அமைப்புகள் பதிவிட்ட அனைத்து கருத்துக்கள், படங்கள், ஆகியவையும் நீக்கப்பட்டுள்ளன.
மேலும், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு பிஎப்ஐ தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டதையும், அதன் துணை அமைப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்டதையும் கணக்கில் எடுத்து செயல்படுமாறு மத்திய அரசு சார்பில் உத்தரவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தடை செய்யுங்க ! கேரள காங்கிரஸ் எம்.பி. கொந்தளிப்பு
இது தவிர பிஎப்ஐ, கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா, ரிஹாப் இந்தியா பவுண்டேஷன் ஆகியவற்றோடு வாட்ஸ்அப்பில் தொடர்பில் இருந்தவர்களின் கணக்குகளும் என்ஐஏ அமைப்பால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பிஎப்ஐ மற்றும் துணை அமைப்புகள் ஏதேனும் சமூக ஊடகக் கணக்குகளை தொடங்கினால், இணையதளம் தொடங்கினாலும் அது தடை செய்யப்படும் என மற்றொரு உயர் அதிகாரி தெரிவித்தார்