pfi ban news: பிஎப்ஐக்கு தடை: 2 ஆண்டுக்கு முன்பே சொன்னேன்! அஜ்மீர் தர்ஹா தலைவர் வரவேற்பு
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்யுங்கள் என்று 2 ஆண்டுகளுக்கு முன்பே கூறினோம். இருப்பினும் தடையை வரவேற்கிறோம் என புகழ்பெற்ற அஜ்மீர் தர்ஹாவின் தலைவர் ஜெயினுல் அபிதீன் அலி கான் வரவேற்றுள்ளார்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்யுங்கள் என்று 2 ஆண்டுகளுக்கு முன்பே கூறினோம். இருப்பினும் தடையை வரவேற்கிறோம் என புகழ்பெற்ற அஜ்மீர் தர்ஹாவின் தலைவர் ஜெயினுல் அபிதீன் அலி கான் வரவேற்றுள்ளார்.
தீவிரவாத செயல்களுக்கு துணை செய்தல், நிதி திரட்டுதல் ஆகியவற்றில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, 19 மாநிலங்களில் என்ஐஏ அமைப்பினர் இரு கட்டங்களாக பிஎப்ஐ அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தடை செய்யுங்க ! கேரள காங்கிரஸ் எம்.பி. கொந்தளிப்பு
இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள், ஆதாரங்களை என்ஐஏ அமைப்பினர் கைப்பற்றினர். 19மாநிலங்களி்ல் இருந்து 200க்கும் மேற்பட்ட பிஎப்ஐ அமைப்பினர், அது தொடர்பான அமைப்பைச் சேர்ந்தவர்கள், தொடர்புள்ளவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதுசார்ந்த 8 துணை அமைப்புகளுக்கு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பிஎப்ஐ அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடைக்கு அஜ்மீர் தர்ஹாவின் தலைவர் ஜெயினுலாபுதீன் அலி கான் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் செய்தி நிறுவனத்துக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
தீவிரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சட்டத்துக்கு உட்பட்டு மத்தியஅரசு பிஎப்ஐ அமைப்பைத் தடை செய்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அனைவரும் வரவேற்க வேண்டும்.
பக்தர்களே மகிழ்ச்சி செய்தி !! திருப்பதி - திருமலை இடையே மின்சார பேருந்து சேவை தொடங்கி வைப்பு
தேசம் பாதுகாப்பாக இருந்தால்தான் நாம் பாதுகாப்பாக இருக்க முடியும். எந்த நிறுவனத்தையும், சித்தாந்தத்தையும்விட இந்த தேசம் மகத்தானது, பெரியது. தேசத்தை யாரேனும் பிளவுபடுத்தும் நோக்கில் , ஒற்றுமையைக் குலைக்கும் நோக்கில், இறையாண்மையைக்குலைக்கும் நோக்கில் பேசினால், அமைதிக்கு குந்தகம் விளைவித்தால், இந்த தேசத்தில் வாழ்வதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை.
பிஎப்ஐ அமைப்பு தேசத்துக்கு விரோதமான செயல்களைச் செய்வதாக அரசுக்கு தகவல்கள் கிடைத்தன. நாட்டின் நலன் கருதி இந்த தடையை அரசு விதித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே, பிஎப்ஐ அமைப்பை தடை செய்யுங்கள் என்று நான் அரசிடம் வலியுறுத்தினேன்” எனத் தெரிவித்தார்
பிஎப்ஐ அமைப்பு ஈடுபட்ட குற்றங்கள் என்ன? பட்டியலிடும் மத்திய அரசு
அனைத்து இந்திய சஜாதானாஷின் கவுன்சில் தலைவர் நஸ்ருதீன் கான் கூறுகையில் “ பிஎப்ஐ அமைப்பைத் தடை செய்து மத்திய அரசு எடுத்த நடவடிக்கையை வரவேற்கிறோம். தேசத்தைவிட எந்த நிறுவனமும் பெரிதானது அல்ல” எனத் தெரிவித்தார்