கருக்கலைப்பு செய்ய கணவனின் அனுமதி தேவையில்லை.. கேரள உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு.
கர்ப்பத்தை கலைக்க கணவனின் அனுமதி தேவையில்லை என கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. திருமணமான சில மாதங்களிலேயே கணவனைப் பிரிய திட்டமிட்ட மனைவி தொடுத்த வழக்கில் இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது.
கர்ப்பத்தை கலைக்க கணவனின் அனுமதி தேவையில்லை என கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. திருமணமான சில மாதங்களிலேயே கணவனைப் பிரிய திட்டமிட்ட மனைவி தொடுத்த வழக்கில் இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது. கர்ப்பத்தை கலைக்க சட்டரீதியாக விவாகரத்து பெற்றவராகவோ அல்லது விதவையாகவோ இருந்தால் மட்டுமே தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியும் என்ற விதி இதுவரை பின்பற்றப்பட்டு வந்த நிலையில் இந்த தீர்ப்பு வந்துள்ளது.
முழு விவரம் பின்வருமாறு:- கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி காதலித்த இளைஞரை திருமணம் செய்துகொண்டார். அந்தப் பெண்ணின் கணவர் பேருந்து கண்டக்டர் ஆவார். திருமணமான சில மாதங்களிலேயே அந்தப் பெண் கர்ப்பமானார். இந்நிலையில்தான் காதல் கணவன் தனது உண்மை முகத்தை மனைவியிடம் காட்ட ஆரம்பித்தார், மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில் தாய்வீட்டிற்கு சென்று வரதட்சனை வாங்கிவருமாறு கூறி கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.
அந்த பெண்ணின் மாமியாரும் மருமகளை கொடுமைபடுத்தி வந்துள்ளார். இதனால் திருமண வாழ்க்கையின் கடும் ஏமாற்றமடைந்த மனைவி, தான் கணவனின் கொடூர முகத்தை சகித்துக் கொள்ள முடியாமல், கேரள உயர்நீதிமன்றத்தில் தனது கருவை கலைக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி காதலனை திருமணம் செய்து கொண்டேன், ஆனால் கணவரும் மாமியாரும் என்னை வரதட்சனை கேட்டு கொடுமை செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு; குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு !
இதற்கிடையில் நான் கர்ப்பம் தரித்து விட்டேன், கணவர் எனது மருத்துவ செலவுகளை கூட கவனித்துக் கொள்வதில்லை, மாறாக வரதட்சனை வாங்கிவரச் சொல்லி கொடுமை செய்கிறார், எனவே கணவரை விட்டுப் பிரிய முடிவு செய்துள்ளேன், எனவே எனக்கு கருக்கலைப்பு செய்ய மருத்துவமனை அணுகினேன், ஆனால் அங்கு மருத்துவர்கள், கணவரின் அனுமதி வாங்கிவரச் சொல்லி திருப்பி அனுப்பிவிட்டனர், மீண்டும் சென்றேன், அப்போதும் என்னை அவமானப்படுத்தி கருக்கலைப்பு செய்ய முடியாது என திருப்பி அனுப்பிவிட்டனர்.
எனவே எனக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதித்து மருத்துவமனைக்கு உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அந்த பெண்ணுக்கு சாதகமாக தீர்ப்பு ஒன்று வழங்கியுள்ளார், அதாவது கருக்கலைப்பு சட்டத்தின் கருக்கலைப்பு தொடர்பான முடிவை பெண்களே எடுக்க உரிமை உள்ளது, எனவே இந்த விவகாரத்தில் கணவனுடைய அனுமதி தேவையில்லை என அவர் தீர்ப்பில் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: ஓட்டு வாங்கி ஜெயிக்க வக்கு இல்ல.. ஸ்டாலினையே மிரட்டுவாறா.?? அண்ணாமலையை டரியல் ஆக்கிய கே. பாலகிருஷ்ணன்.
பெண் கணவருடன் சட்டபூர்வமாக விவாகரத்து செய்யவில்லை, ஆனாலும் கனவுகளுடன் அவர் வாழ விரும்பவில்லை, அதாவது திடீரென கணவன்-மனைவி உறவில் கடுமையான மாற்றம் ஏற்படும் பச்சத்தில், அது திருமண நிலை மாற்றத்திற்கு சமமாகும். அதாவது அது விவாகரத்துக்கு சமம், ஒரு பெண்ணின் இனப்பெருக்க தேர்வுக்கான உரிமை அந்தப் பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம் ஆகும். இனப்பெருக்கம் செய்ய அல்லது இனப்பெருக்கம் செய்வதை தவிர்க்க ஒரு பெண்ணுக்கு முழு உரிமை உண்டு. இதற்கு எந்த தடையும் இருக்க முடியாது என நீதிபதி வி.ஜி அருண் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.