Donald Trump | ஆண்டவனே என் பக்கம் இருக்கார்... படுகொலை முயற்சிக்குப் பின் மீண்டு வந்த டொனால்ட் டிரம்ப் பேச்சு!
அமெரிக்க குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் பேசிய டொனால்ட் ட்ரம்ப், தன் மீது நடந்த துப்பாக்கிச்சூடு குறித்து முதல்முறையாக விவரித்துள்ளார். ஆண்டவனே என் பக்கம் இருந்ததால் தான் உயிர்பிழைத்தேன் என பேசினார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அமெரிக்க தேர்தலில் களம் சூடிபிடித்துள்ளது அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். துணை அதிபர் பதவிக்கு ஜே.டி.வான்ஸ்-ஐ டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் டொனால்ட் டிரம்ப் பெனிசில்வேலியாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து உயிர்தப்பினார். சுடப்பட்ட துப்பாக்கி குண்டு காதை கிழித்துக்கொண்டு சென்ற நிலையில் டொனால்ட் டிரம்ப் உயிர்தப்பினார்.
சில்நாட்கள் சிகிச்சை பெற்று வந்த டொனால்ட் டிரம்ப், அமெரிக்க குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, கடந்த வாரம் தன் மீது நடந்த துப்பாக்கிச்சூடு குறித்து விவரித்தார். அப்போது, ஆண்டவனே தன் பக்கம் இருப்பதாகத் தெரிவித்த டிரம்ப், கொலை முயற்சி தாக்குதலின் போதும் தான் பாதுகாப்புடன் இருப்பதாக உணர்ந்ததாகக் குறிப்பிட்டார். பின்னர் மேடையில், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டார். இந்த மாநாட்டில் "இன்று இரவு நான் உங்கள் முன்னால் நின்றிருக்க முடியாது. எல்லாம் அந்த இறைவனின் கருனையால் மட்டுமே உங்கள் முன் நிற்கிறேன்" என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
அந்த நாள்...
துப்பாக்கி குண்டு சுடப்பட்டதும், முதலில் பலமான சத்தம் கேட்டது. அதன் பிறகு என் காதில் ஏதோ ஒன்று என்னை மிகக்கடுமையாகத் தாக்கியது போல் இருந்தது. அது கண்டிப்பாக துப்பாக்கி குண்டாக மட்டுமே இருக்க முடியும் என்று நான் எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன். நான் எனது கையை வைத்து தொட்டுப் பார்க்கையில், கை முழுக்க ரத்த கறை படிந்தது. ரத்தம் சொட்ட சொட்ட கொட்டிக் கொண்டிருந்தது. அப்போதும், நான் மிகவும் பாதுகாப்பாக இருபதாகவே உணர்ந்தேன். ஏனென்றால் அப்போது ஆண்டவனே என் பக்கம் இருந்தார்" என்று டிரம்ப் நெகிழ்ச்சியாக பேசினார்.
Donald Trump:அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு! ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதி
டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற இருபதே வயது ஆன இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரை பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பதில் தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றனர். இந்த துப்பாக்கி சூட்டிற்கு காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாகவும் அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விஷயத்தில் பாபா வாங்கா கணித்தது அப்படியே பலித்ததா?