Donald Trump:அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு! ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதி
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
பென்சில்வேனியாவில் பரப்புரை செய்து கொண்டிருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதையொட்டி பல்வேறு மாகாணங்களில் இருவரும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பென்சில்வேனியா மாகாணம் பட்லர் பகுதியில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது டிரம்ப்பை குறி வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய டிரம்ப்புக்கு காதில் ரத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்கள் டிரம்ப்பை சுற்றி பாதுகாப்பு அரணாக மாறினர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, துப்பாக்கிசூடு நடத்திய நபரை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த டொனால்டு டிரம்ப் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்திற்கு அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் ஓபாமா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.