US Election | டொனால்ட் டிரம்ப்பின் துணை அதிபர் தேர்வு ஒரு இந்திய வம்சாவளியின் கணவர்! யார் இந்த உஷா சிலிகுரி!
உஷா சிலிகுரி வான்ஸ், யேல் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலைப் பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை தத்துவப் பட்டமும் பெற்றுள்ளார். இவரது கணவர் ஜேடி வான்ஸ்-ஐ அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் சூடிபிடித்துள்ளது. குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வரும் நிலையில் (JD Vance) ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி குறித்த பின்னணி கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக உஷா சிலிகுரி வான்ஸ் இந்திய வம்சாவளி நபர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
துணை அதிபர் வேட்பாளர் யார்?
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. மேலும் துணை அதிபராக (JD Vance) ஜே.டி.வான்ஸ்-ஐ டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விஷயத்தில் பாபா வாங்கா கணித்தது அப்படியே பலித்ததா?
யார் இந்த ஜேடி வான்ஸ்
மில்வாகியில் நடந்த குடியரசுக் கட்சியின் தேசியக் கூட்டத்தில், துணை அதிபர் வேட்பாளரான ஜேடி வான்ஸ் பெயரை அறிவித்தார். எனக்கு சரியான நபராக ஓஹியோ மாகாணத்தின் செனட்டர் ஜே.டி.வான்ஸ் இருப்பார் என நம்புகிறேன் எனத் தெரிவித்தார். 39 வயதாகும் ஜே.டி.வான்ஸ் 2022ம் ஆண்டு செனட்டிற்கு தேர்வு செய்யப்பட்டார். ஜேடி வான்ஸ் எழுதிய நினைவுக் குறிப்பான 'ஹில்பில்லி எலிகி' என்ற புத்தகத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
உஷா சிலிகுரி வான்ஸ்
இவரது மனைவியான உஷா சிலிகுரி ஓர் இந்தியா வம்சாவளி ஆவார். இந்த தம்பதி குறித்த விசயங்கள் அமெரிக்க தேர்தலில் கவனம் பெற்றுள்ளது. இவர்கள் குறித்த தவகல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உஷா, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த தம்பதிக்கு மகளாய் பிறந்தவர்.
அமெரிக்காவின், சான் டியகோவில் பிறந்து வளர்ந்த உஷா, யேல் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலைப் பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை தத்துவப் பட்டமும் பெற்றுள்ளார் இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகளான பிரெட் கவனாஹ், ஜான் ராபர்ட்ஸ் ஆகியோரின் கீழ் நீதிமன்ற ஊழியராக வேலை பார்த்தார். லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் டிசி ஆகிய நகரங்களில் உள்ள பிரபல பெரிய பெரிய நிறுவனங்களில் சட்ட வல்லுநராகவும் பணியாற்றியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு.. என்கவுன்டரில் இறங்கிய போலீஸ்.. பிரதமர் மோடி கண்டனம்.. என்ன நடந்தது?
முங்கர், டோல்ஸ் & ஆல்சன் நிறுவனத்தின் அசோசியேட் ஆக 2015ல் பணியில் சேர்ந்த உஷா, உயர்கல்வி, உள்ளாட்சி நிர்வாகம், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், செமி கண்டக்டர்கள் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு வழக்குகளை திறம்பட கையாண்டுள்ளார். சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கணவருக்கு அரசியிலில் உருதுணையாக இருந்து வருகிறார்.