அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விஷயத்தில் பாபா வாங்கா கணித்தது அப்படியே பலித்ததா?
டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி நிலையில் பிரபல தீர்க்கதரிசி பாபா வங்காவின் கணிப்புகள் பலித்துவிட்டதாக கூறப்படுகிறது.
டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி நிலையில் பிரபல தீர்க்கதரிசி பாபா வங்காவின் கணிப்புகள் பலித்துவிட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்க முன்னாள் அதிபரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று பாபா வங்கா கணித்ததாகவும் அவர் கூறியது போலவே தற்போது டொனால்ட் ட்ரம்ப் மீதுதுப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சனிக்கிழமையன்று, ஒரு பிரச்சார கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த டொனால்ட் டிரம்ப் மீது 20 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். அவர் பென்சில்வேனியாவின் பெத்தேல் பூங்காவைச் சேர்ந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என அமெரிக்க புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பல வீடியோக்கள் பரவிய நிலையில், தாம்ஸ் மேத்யூ ட்ர்ம்பை நோக்கி பல முறை சுடுவதையும், அதில் ஒன்று டிரம்பின் வலது காதில் பாய்ந்ததையும் பார்க்க முடிகிறது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பேரணியில் கலந்து ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் இருவர் காயமடைந்ததாகவும் எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது. மேலும் தாமஸ் மேத்யூ பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வெளியே உயரமான இடத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
'பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்' என்று அழைக்கப்படும் பிரபல தீர்க்கதரிசி பாபா வங்கா, தனது தீர்க்கதரிசன கணிப்புகளுக்காக புகழ் பெற்றவர். விளாடிமிர் புடின் மற்றும் டொனால்ட் டிரம்ப் இருவரின் உயிர்களும் ஆபத்தில் இருக்கும் என்று பாபா வங்கா கணித்துள்ளார்.
மேலும் டிரம்ப் ஒரு மர்மமான நோயால் பாதிக்கப்படுவார் எனவும், இதனால் அவர் காதுகேளாதவராக மாறுவார் எனவும், மூளைக் கட்டியால் பாதிக்கப்படுவார் என்றும் அவர் கணித்துள்ளார். டிரம்ப் மீதான சமீபத்திய படுகொலை முயற்சி அவரது வாழ்க்கை ஆபத்தில் இருப்பதைப் பற்றிய பாபா வங்காவின் தீர்க்கதரிசனத்திற்கு வலு சேர்ப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது.
யார் இந்த பாபா வங்கா?
1911 இல் வடக்கு மாசிடோனியாவில் பிறந்தவர் பாபா வங்கா. ஆனால் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அவர் பல்கேரியாவில் கழித்தார். இவரது இயற்பெயர் வாங்கெலியா பாண்டேவா குஷ்டரோவா. பாபா வங்கா, தனது 12-வது வயதில் மிகப்பெரிய புயலில் சிக்கி, தனது பார்வையை இழந்தார். எனினும் அதன்பிறகு அவர், எதிர்காலத்தை பற்றி கணிக்க தொடங்கினார். அவரின் பல கணிப்புகள் உண்மையானதால் அவை மிகவும் நம்பிக்கைக்குரியவையாக பார்க்கப்படுகின்றன. எதிர்காலத்தை கணிக்கும் தீர்க்கதரிசனம் மற்றும் இறந்தவர்களுடன் தொடர்பு கொள்ளும் திறனுக்காக அவர் புகழ் பெற்றார். பாபா வங்கா 1996 இல் இறந்தார். அவரின் கணிப்புகள் 85 சதவீதம் சரியாக இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல், செர்னோபில் விபத்து, இளவரசி டயானாவின் மரணம், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது, 2004 சுனாமி போன்ற முக்கிய நிகழ்வுகளை துல்லியமாக கணித்தவர் ஆவார். மேலும் கோவிட் பெருந்தொற்று, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் குறித்தும் அவர் கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.