சிங்கப்பூரர்களுக்கு வருகிறது ஒரு நற்செய்தி.. சீரடையும் காற்றின் நிலை - NEA அதிகாரிகள் வெளியிட்ட அப்டேட்!
Singapore : கடந்த சில வாரங்களாகவே சிங்கப்பூரின் மத்திய பகுதியில் மிதமான நிலையை தாண்டி சுகாதாரமற்ற நிலைக்கு சென்றது காற்றின் தன்மை. மக்கள் வெளியில் செல்லும்போது கணவத்துடன், காற்றின் தரத்தை சோதித்துவிட்டு செல்லுமாறு NEA அறிவுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிங்கப்பூரில் காற்றின் தரம், மெல்ல மெல்ல சீரடைந்து வருவதாக NEA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று அக்டோபர் 8 ஆம் தேதி தேசிய சுற்றுச்சூழல் முகமையின் (NEA) அறிவிப்புபடி, சிங்கப்பூருக்கான 24 மணிநேர PSI அசுத்தமான நிலையில் இருந்து "மிதமான" வரம்பிற்கு மாறவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
NEA மேலும் கூறுகையில், சிங்கப்பூரின் மத்திய பகுதியில் வறண்ட நிலை நீடிக்கும் என்றும், இந்தோனேசியாவில் கண்டறியப்பட்ட ஹாட்ஸ்பாட்களின் எண்ணிக்கை, பெரும்பாலும் சுமத்ராவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வழியாக செல்கிறது என்றும் இதனால் சிங்கப்பூருக்கு ஏற்படும் காற்று மாசுபாட்டின் தன்மை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
Chicago Rally | பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் அமெரிக்கா! கண்டிக்கும் மக்கள் சிக்காகோவில் பேரணி!
இன்று அக்டோபர் 9ம் தேதி, நிலவும், காற்றும் கிழக்கிலிருந்து வீசுவதால் கடும் காற்று மாசு சிங்கப்பூரை தாக்குவது குறையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிங்கப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதுவும் சிங்கப்பூரும் ஏற்படும் காற்று மாசை குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கடந்த அக்டோபர் 7, 2023 அன்று காலை, சிங்கப்பூரின் சில பகுதிகளில் காற்றின் தரம் "ஆரோக்கியமற்ற" வரம்பிற்குள் நுழைந்தது என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019க்குப் பிறகு இப்படி காற்று தரமற்ற முறைக்கு செல்வது அதுவே முதல் முறை என்றும் கூறப்பட்டது. சிங்கப்பூர் தேசிய சுற்றுச்சூழல் முகமையின் (NEA) அறிவிப்பின்படி இந்த நிலை இவ்வாறு இறுதி வரை நீடிக்கும் என்றும் கணிக்கப்பட்டது.
சுமத்ரா தீவுகளில் உள்ள சிறு சிறு எரிமலை வெடிப்புகள் மூலம் தான் அதிக புகை மண்டலம் உருவாகி, கடந்த சில நாட்களாக சிங்கப்பூரில் காற்றின் தரத்தை குறைக்க வழிவகுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. PSI அளவு சுமார் 111ஆக இருந்த நிலையில், அது மிதமான நிலைக்கு மாறியுள்ளது.
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு: அமெரிக்காவைச் சேர்ந்த கிளாடியா கோல்டினுக்கு அறிவிப்பு