பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு: அமெரிக்காவைச் சேர்ந்த கிளாடியா கோல்டினுக்கு அறிவிப்பு
இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார அறிஞர் கிளாடியா கோல்டின் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார அறிஞர் கிளாடியா கோல்டின் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் தொழிலாளர்கள் பற்றிய புரிதலை மேம்படுத்தியதற்காக இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராயல் ஸ்வீடிஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில், "2023 ஆல்பிரட் நோபலின் நினைவாக வழங்கப்படும் பொருளாதார அறிவியலுக்கான ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் பரிசு, பெண்களின் தொழிலாளர் சந்தை விளைவுகளைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்தியதற்காக கிளாடியா கோல்டினுக்கு வழங்கப்பட்டது.
இசை விழாவை ரணகளமாக்கிய ஹமாஸ் பயங்கரவாதிகள்; 260 சடலங்கள் மீட்கப்பட்டதாக இஸ்ரேல் தகவல்
பொருளாதார அறிஞர் கிளாடியா கோல்டின் தொழிலாளர் சந்தையில் பெண்களின் வாய்ப்புகளைப் பாதிக்கும் காரணிகள் மற்றும் அவர்களின் பெண் தொழிலாளர்களுக்கு எவ்வளவு தேவை உள்ளது என்பதைப் பற்றிய ஆழமான புரிதலை அவர் வழங்கியுள்ளார்.
பெண்கள் பெரும்பாலும் திருமணம், வீடு, குடும்பப் பொறுப்புகள் ஆகியவற்றிற்கு உள்ளேயே அடக்கிவைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் இதில் மாற்றம் உண்டாவதற்கு நேரம் எடுக்கும் என்றும் கோல்டினின் ஆய்வுகள் கூறுகின்றன என நோபல் பரிசு குழு தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்தில் கிளாடியா கோல்டினின் நுண்ணறிவு அமெரிக்காவுக்கும் மட்டுமின்றி, எல்லைகளைக் கடந்து பல நாடுகளைச் சென்றடைகிறது எனவும் அவரது ஆராய்ச்சி நேற்று, இன்று, நாளை என தொழிலாளர் சந்தைகளைப் பற்றிய சிறந்த புரிதலை நமக்குத் தருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் என ஆறு துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளன.
Assembly Election 2023 Date: 5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிப்பு; டிச. 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!