Assembly Election 2023 Date: 5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிப்பு; டிச. 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Election Commission Announces Poll Dates For 5 States: Madhya Pradesh, Chhattisgarh, Rajasthan, Telangana, and Mizoram sgb

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது. திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஐந்து மாநிலங்களில் அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகள் உள்ளன. ராஜஸ்தானில் 200 தொகுதிகளும், தெலுங்கனாவில் 119 தொகுதிகளும் சத்தீஸ்கரில் 90 தொகுதிகளும் இருக்கின்றன. வடகிழக்கு மாநிலமான மிசோரம் 40 தொகுதிகளைக் கொண்டது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டத்தில் 20 தொகுதிகளுக்கும் இரண்டாவது கட்டத்தில் 70 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும். மற்ற நான்கு மாநிலங்களும் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றன.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: 16 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டப்போகுது!

மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தல்

வாக்குப்பதிவு நாள் - நவம்பர் 7

வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் - அக்டோபர் 13

வேட்புமனு தாக்கல் முடியும் நாள் - அக்டோபர் 20

வேட்புமனு பரிசீலனை தொடங்கும் நாள் - அக்டோபர் 21

வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் - அக்டோபர் 23

சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல் (இரண்டு கட்டங்களாக)

வாக்குப்பதிவு நாள் - நவம்பர் 7, 17

வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் - அக்டோபர் 13 (முதல் கட்டம்), அக்டோபர் 21 (இரண்டாவது கட்டம்)

வேட்புமனு தாக்கல் முடியும் நாள் - அக்டோபர் 20 (முதல் கட்டம்), அக்டோபர் 30 (இரண்டாவது கட்டம்)

வேட்புமனு பரிசீலனை தொடங்கும் நாள் - அக்டோபர் 21 (முதல் கட்டம்), அக்டோபர் 31 (இரண்டாவது கட்டம்)

வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் - அக்டோபர் 23  (முதல் கட்டம்), நவம்பர் 2 (இரண்டாவது கட்டம்)

மத்திய பிரதேசம் சட்டப்பேரவைத் தேர்தல்

வாக்குப்பதிவு நாள் - நவம்பர் 17

வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் - அக்டோபர் 21

வேட்புமனு தாக்கல் முடியும் நாள் - அக்டோபர் 30

வேட்புமனு பரிசீலனை தொடங்கும் நாள் - அக்டோகர் 31

வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் - நவம்பர் 2

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல்

வாக்குப்பதிவு நாள் - நவம்பர் 23

வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் - அக்டோபர் 30

வேட்புமனு தாக்கல் முடியும் நாள் - நவம்பர் 6

வேட்புமனு பரிசீலனை தொடங்கும் நாள் - நவம்பர் 7

வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் - நவம்பர் 9

தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தல்

வாக்குப்பதிவு நாள் - நவம்பர் 30

வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் - நவம்பர் 3

வேட்புமனு தாக்கல் முடியும் நாள் - நவம்பர் 10

வேட்புமனு பரிசீலனை தொடங்கும் நாள் - நவம்பர் 13

வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் - நவம்பர் 15

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள்

வாக்கு எண்ணிக்கை நாள் - டிசம்பர் 3

தேர்தல் பணிகள் முடிவுக்கு வரும் நாள் - டிசம்பர் 5

செய்தியாளர் சந்திப்பில் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தலைச் சந்திக்கும் ஐந்து மாநிலங்களிலும் 16 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். மேலும், தேர்தலை முன்னிட்டு இந்த ஐந்து மாநிலங்களிலும் 177 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார். "40 நாட்களில் நாங்கள் 5 மாநிலங்களுக்கும் சென்று அரசியல் கட்சிகள், மத்திய மற்றும் மாநில அமலாக்க அமைப்புகளுடன் கலந்துரையாடினோம்" எனவும் அவர் தெரிவித்தார்.

ஓலா முதல் பஜாஜ் வரை... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க எக்கச்செக்க சாய்ஸ் இருக்கு! எது பெஸ்டு?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios