விண்வெளியில் 20 நிமிடத்திற்கு ஒரு முறை மின்னி மறையும் மர்ம ஒளி! அதிசயிக்கும் விஞ்ஞானிகள்!!

ஆஸ்திரேலிய விண்வெளி விஞ்ஞானிகள் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ரேடியோ அலைகளை வெளியிடும் அரிய நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Scientists Discover Mysterious Light Blinking Every 20 Minutes In Space

மர்மமான பண்புகள் கொண்ட இரண்டு நட்சத்திரங்களை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ரேடியோ அலைகளை வெளியிடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

நேஷனல் ஜியோகிராஃபிக் அளிக்கும் தகவலின்படி, திரும்பத் திரும்ப வரும் சிக்னல்களுடன் கலங்கரை விளக்கங்களின் ஒளியைப் போலத் தோன்றும் ஆற்றல்மிக்க ஒளிக்கற்றைகள் அவற்றைச் சுற்றிக் காணப்படுவதாகவும் தெரிகிறது. இவை புதிய வகை நட்சத்திரத்தைக் குறிக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

நேச்சர் இதழில் இதைப் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது. இரண்டு நட்சத்திரங்களும் எந்த நியூட்ரான் நட்சத்திரத்தையும் விட மிக மெதுவாகச் சுழல்கின்றன. மேலும் அவை மற்ற நட்சத்திரங்களின் பண்புகளையும் கொண்டுள்ளன என்று கட்டுரை தெரிவிக்கிறது.

சொந்தமாக ரயில் வைத்திருக்கும் ஒரே விவசாயி! இவர் ரயில் வாங்கியது எப்படி தெரியுமா?

மேற்கு ஆஸ்திரேலியாவின் பென்ட்லியில் உள்ள கர்டின் பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வாளர் நடாஷா ஹர்லி-வாக்கர் இருவரும் இந்த் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். "நாங்கள் அனைவரும் இன்னும் ஆச்சரியமாகவும், ஆர்வமாகவும், குழப்பமாகவும் இருக்கிறோம்" என்று சொல்கிறார்.

2018ஆம் ஆண்டிலிருந்து பதிவு செய்யப்பட்ட தரவுகளில் ரேடியோ துடிப்பு மெதுவாகத் திரும்புவதைக் கண்டுபிடித்த பிறகு, விஞ்ஞானிகள் 2021ஆம் ஆண்டில் இந்த மர்மத்தைப் பற்றி ஹர்லி-வாக்கரினின் குழுவினர் கண்டுபிடித்தனர். ஆய்வின்போது ஒரு நட்சத்திரம் மூன்று மாதங்கள் மின்னிக்கொண்டிருந்ததாகவும் ஆனால், விரைவில் அதன் செயல்பாடு குறைந்து, வானத்தில் கண்ணுக்கு தெரியாமல் போனதாகவும் கூறுகின்றனர்.

இது ஒரு அரிய வகை காந்தமாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். இதற்கு GLEAM-X J162759.5-523504.3 என்று பெயரிட்டிருக்கின்றனர். இந்த நட்சத்திரம் காந்தங்களைப் போல ஒவ்வொரு சில வினாடிகளுக்குப் பதிலாக ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கும் ஒரு சிக்னலை அனுப்புகிறது என்று கூறுகின்றனர்.

கல்வி திருட முடியா சொத்து... பெண் கற்க தடை இருக்கக் கூடாது: கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் உரை

Scientists Discover Mysterious Light Blinking Every 20 Minutes In Space

பின்னர் விண்வெளியில் இதே போன்ற பிற பொருட்களையும் தேடத் தொடங்கியுள்ளனர். ஜூன் 2022இல், நடாஷா ஹர்லி-வாக்கரும் அவரது குழுவினரும் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மர்ச்சிசன் வைட்ஃபீல்ட் அரேயுடன் இரவு வானத்தை மூன்று இரவுகள் கவனித்தனர். அப்போது ஒரு நட்சத்திரம் ஒவ்வொரு 21 நிமிடங்களுக்கும் ஒரு ரேடியோ அலைகளை வெளியிடுவதைக் கண்டறிந்தனர். இந்த நட்சத்திரம் குறைந்தபட்சம் 1988ல் இருந்து அதைச் செய்து வருகிறது என்கிறார்கள். இதற்கு GPM J1839-10 என்று பெயர் வைத்துள்ளனர்.

இப்போதைக்கு, இரண்டு பொருட்களும் ஒரே மாதிரியானவை என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். "ஆனால் ஒன்று ஏன் மூன்று மாதங்களுக்கும் மற்றொன்று 33 வருடங்களுக்கும் ஒளிர்கின்றன என்பது எனக்குத் தெரியாது" என ஹர்லி-வால்கர் கூறுகிறார்.

செம்ம லுக்... மிகக் குறைந்த விலை... அசத்தும் ஜியோ புக் லேப்டாப்! புத்தம் புதிய ஜியோ ஓஎஸ்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios