செம்ம லுக்... மிகக் குறைந்த விலை... அசத்தும் ஜியோ புக் லேப்டாப்! புத்தம் புதிய ஜியோ ஓஎஸ்!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஜியோ புக் லேப்டாப் வெறும் ரூ.16,499 ரூபாய் விலையில் அட்டகாசமான வசதிகளை அளிக்கிறது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய ஜியோ புக் லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஜியோ புக் லேப்டாப்பின் வடிவமைப்பு அண்மையில் அமேசானில் இணையதளத்தில் வெளியான நிலையில் தற்போது அந்த லேப்டாப் அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட லேப்டாப்பைப் போலவே இருந்தாலும், இது பட்ஜெட் விலை லேப்டாப்பாக உள்ளது. சிறிய அளவில் வரும் இந்த லேப்டாப் நீல நிறத்தில் வருகிறது. இந்த லேப்டாப் பொழுதுபோக்கு, கல்வி மற்றும் கேமிங் போன்றவற்றுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதிவேக இன்டர்நெட் வசதி
ஜியோ புக் லேப்டாப்பில் பயனர்கள் 4ஜி இணைப்பைப் பெறலாம். இதனுடன் ஆக்டாகோர் பிராசெசரும் இருக்கும். ஜியோ புக் லேப்டாப்பில் உள்ள 11.6 இன்ச் திரையில் ஹெச்.டி. வீடியோவைப் பார்க்க முடியும். ஜியோ ஓஎஸ் என்ற புதிய இயங்குதளத்தில் பல்வேறு மென்பொருள்களைப் நிறுவ முடியும்.
கிட்டத்தட்ட ஒரு கிலோ எடை கொண்ட ஜியோ புக் லேப்டாப்பில் எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய வகையில் மெல்லிய வடிவமைப்பில் உள்ளது. இதன் டிசைன் மட்டுமின்றி பேட்டரியும் கவர்ச்சிகரமாக உள்ளது. ஒரு முறை முழுமையாகச் சார்ஜ் செய்தால் நாள் முழுவதும் தாக்குப்படிக்கும் பேட்டரி திறன் இருக்கிறது.
ஜியோ புக் லேப்டாப்
ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஆண்டு அக்டோபரில் ஒரு ஜியோ லேப்டாப்பை அறிமுகப்படுத்தியது. ஆனால், இது ஒரு பட்ஜெட் லேப்டாப் ஆகும். எடை குறைவாக இருப்பதால் எங்கு வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்லலாம். மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு பயன்படுத்த ஏற்றதாக இருக்கும்.
ஜியோவின் 4G LTE சிம் கார்டுடன் வரும் இந்த லேப்டாப்பில் 4ஜி வேகத்தில் இணைய வசதியை பயன்படுத்த முடியும். கனெக்டிவிட்டி தேவைகளுக்காக வைஃபை, ப்ளூடூத் 5.0 போன்ற அம்சங்களும் உள்ளன. லேப்டாப் ஹேங் ஆகாமல் செயல்படுவதற்கு 4 ஜிபி ரேம் இருக்கிறது. 64 ஜிபி ஃபிளாஷ் மெமரியை 256ஜிபி வரை நீட்டிக்கும் வாய்ப்பும் உள்ளது. இத்தனை வசதிகளும் வெறும் ரூ.16.499 விலைக்குக் கிடைக்கிறது.