பாலஸ்தீன மக்களை கண்ணைக் கட்டி நிர்வாணமாகக் கூட்டிச் சென்ற இஸ்ரேல் ராணுவம்!
இஸ்ரேலில் இந்தச் செயல் ஜெனிவா ஒப்பந்தத்தை மீறுவது ஆகாதா என்று கேட்டதற்கு பதில் கூறிய ரெகேவ், "அந்த வீடியோ இஸ்ரேல் அரசு வெளியிட்ட அதிகாரபூர்வ வீடியோ இல்லை" என்று கூறியிருக்கிறார்.
ஹமாஸ் பயங்கரவாதக் குழுவினருக்கு எதிராக காசா மீது போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் ராணுவம் காசாவில் இருந்து கைது செய்யப்பட்ட பாலஸ்தீனிய மக்களை நிர்வாணமாக்கி வாகனத்தில் அழைத்து செல்லும் காட்சி சமுக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு திறந்தவெளியில் லாரியில் ஏற்றிச் செல்லப்படும் அந்த பாலஸ்தீன மக்களின் கை கால்களும் கண்களும் கட்டப்பட்டுள்ளதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது. இதைப்பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மூத்த ஆலோசகரான மார்க் ரெகெவ் பிரிட்டன் ஊடகம் ஒன்றுக்குப் அளித்த பேட்டியில் விவரித்துள்ளார்.
பாலஸ்தீனியர்களின் கண்களையும் கைகால்களையும் கட்டி அழைத்துச் செல்வது ஏன் என்று அவரிடம் கேள்வி எழுப்பியபோது, "நாங்கள் மத்திய கிழக்கு நாட்டில் இருக்கிறோம் என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள். இங்கே வானிலை மிகவும் வெப்பமாக இருக்கிறது" என்று ரெகேவ் சர்வ சாதாரணமாக பதில் கூறியுள்ளார்.
டாய்லெட்டில் மைக்கை ஆஃப் செய்ய மறந்த விவேக் ராமசாமி! விழுந்து விழுந்து சிரித்த எலான் மஸ்க்!
தொடர்ந்து, இஸ்ரேலில் இந்தச் செயல் ஜெனிவா ஒப்பந்தத்தை மீறுவது ஆகாதா என்று கேட்டதற்கு பதில் கூறிய ரெகேவ், "அந்த வீடியோ இஸ்ரேல் அரசு வெளியிட்ட அதிகாரபூர்வ வீடியோ இல்லை" என்று கூறியிருக்கிறார்.
பேட்டி எடுத்தவர், அந்த வீடியோ இஸ்ரேலிய ராணுவத்தினரால் எடுக்கப்பட்டது என்றால், அது கண்டிப்பாக ஜெனிவா ஒப்பந்தத்தை மீறும் செயலாகவே கருதப்படும் என்று கூறவும், "சர்வதேச சட்டம் பற்றி எனக்கு அந்த அளவிற்குத் தெரியாது. நான் சட்டத்துறையுடன் ஆலோசிக்க வேண்டும்" என்று அசால்டாக பதில் சொல்கிறார் ரெகேவ்.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடரும் இஸ்ரேலிய தாக்குதல்களால், காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 18,000 க்கு மேல் உயர்ந்துள்ளது என பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் பகுதியில் நடந்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஹமாஸ் மீது தாக்குதலைத் தொடங்கியது. சுமார் 140 பேர் இன்னும் காசாவில் உள்ள ஹமாஸ் குழுவினரின் பிடியில் உள்ளனர்.
பெரியாருக்கே இடம் இல்லையா! கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்படுகிறது! முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்