டாய்லெட்டில் மைக்கை ஆஃப் செய்ய மறந்த விவேக் ராமசாமி! விழுந்து விழுந்து சிரித்த எலான் மஸ்க்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி குறித்து எலான் மஸ்க் கேலியாக கமெண்ட் செய்துள்ளார்.
இந்திய-அமெரிக்க தொழிலதிபரும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான விவேக் ராமசாமி சமீபத்தில் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் மற்றும் இன்ஃபோவார்ஸ் நிறுவனர் அலெக்ஸ் ஜோன்ஸ் ஆகியோருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
ட்விட்டர் ஸ்பேஸஸ் மூலம் ஒலிபரப்பான இந்தக் கலந்துரையாடலை சுமார் 2.3 மில்லியன் பேர் கேட்டுக்கொண்டிருந்தனர். நிகழ்ச்சியில் எலான் மஸ்க் பேசிக்கொண்டிருந்தபோது விவேக் ராமஸ்வாமி குறுக்கிட்டு, "ஜென்டில்மேன், நான் போக வேண்டும்," என்று கூறிவிட்டுச் சென்றார்.
அவர் சென்ற சிறிது நேரத்தில் நிகழ்ச்சிக்குப் பின்னணியில் தண்ணீர் சத்தம் கேட்டது. அதைக் கேட்ட அலெக்ஸ் ஜோன்ஸ், "யாரோ ஒருவர் சிறுநீர் கழிக்கிறார் போலிருக்கிறது" என்று தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பான நகரம் எது? தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வழங்கும் டாப் 10 பட்டியல்!
உடனே கலந்துரையாடலை ஒருங்கிணைத்த தொகுப்பாளர் மரியோ நவ்பல், "விவேக், உங்கள் ஃபோனை மியூட் செய்யவில்லை" என்று கூறினார். அதைக் கேட்டு திடுக்கிட்ட விவேக் ராமசாமி, என்ன நடந்தது என்பதை உணர்ந்து, சங்கடமான தருணத்திற்காக உடனடியாக மன்னிப்பு கேட்டார்.
உடனே எலான் மஸ்க், "நீங்கள் இப்போது நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்" என்றார். அதற்கு பதிலளித்த ராமசாமி, "ஆம், நன்றாக இருக்கிறேன். நண்பர்கள் மன்னிக்கவும்" என்றார்.
இந்தச் சம்பவம் பற்றி ட்விட்டரில் பலரும் வேடிக்கையான கருத்துகளைக் கூறிவருகின்றனர். ஒரு பயனர் "இது ஒரு லெஜண்ட்ரி தருணம்" என்று கூறியுள்ளார். "மிகவும் வேடிக்கையாக இருந்தது" என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். கமெண்ட் அடித்த பயனர்களுடன் சேர்ந்துகொண்ட ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க், "நான் உண்மையில் விழுந்து விழுந்து சிரித்தேன்" என்று கூறினார்.
38 வயதான விவேக் ராமசுவாமி தென்மேற்கு ஓஹியோவைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் கேரளாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள். நவம்பர் 5, 2024 அன்று நடைபெற உள்ள அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் விவேக் ராமசாமி போட்டியிடுகிறார்.
புதிய சகாப்தம் ஆரம்பம்! சட்டபிரிவு 370 ஐ நீக்க மோடி அரசின் நடவடிக்கையைப் பாராட்டும் ராணுவ வீரர்கள்!