தீர்ப்பை வரவேற்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இந்திய ராணுவத்தில் உயர் பதவிகளை வகித்த மூத்த ராணுவ வீரர்களும் தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து கருத்து கூறியுள்ளனர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 370 மற்றும் 35A ஆகியவை நீக்கப்பட்டது சரியே என்றும் லடாக்கை யூனியன் பிரதேசமாகப் பிரித்தது செல்லும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தத் தீர்ப்பை வரவேற்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இந்திய ராணுவத்தில் உயர் பதவிகளை வகித்த மூத்த ராணுவ வீரர்களும் தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து கருத்து கூறியுள்ளனர்.

முன்னாள் ராணுவ வீரர் வேத் மாலிக் கூறுகையில், "சட்டப்பிரிவு 370 இன் முடிவைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அது பெரும்பாலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. இந்தியாவின் தேசிய நலன் மற்றும் பாதுகாப்புக்கு தடையாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

KJS தில்லான், "சட்டப்பிரிவுபிரிவு 370 மற்றும் 35A இரண்டும் நீக்கப்பட்ட வேண்டும்!" என்று தெரிவித்துள்ளார். இதையே தனது புத்தகத்திலும் முன்பே கூறியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"புதிய சகாப்தம் உருவாகிறது. காஷ்மீர் பிரச்சனை இறுதியாக உச்ச நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டது" என்று பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் குமார் தெரிவித்துள்ளார். சிறப்பு அந்தஸ்து நீக்கபட்டது ஒரு முன்னுதாரண மாற்றம் என்றும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்கு இறுதியாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Scroll to load tweet…

"ஜம்மு காஷ்மீர் எப்போதும் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. இப்போது அரசியலமைப்பு ரீதியிலான ஒருங்கிணைப்பு முடிந்திருக்கிறது. உண்மையிலேயே இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு" என்று கர்னல் எஸ் டின்னி (ஓய்வு) கருத்து தெரிவித்துள்ளார்.

"உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பால். அனைத்து சர்ச்சைகளும் ஓய்ந்தன. 70 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த குழப்பம் துடைக்கப்பட்டுள்ளது. தற்போதைய மத்திய அரசின் துணிச்சலான முயற்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. இனி தேர்தலுக்குத் நேரம்" என்று பிரிக் ஜெய் கவுல் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.