மூன்றாம் உலகப்போரின் தேதியை கணித்த இந்திய ஜோதிடர்.. வரவிருக்கும் அழிவு குறித்து எச்சரிக்கை..
மூன்றாம் உலகப்போர் தொடங்கும் தேதிகளை இந்திய ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார்.
தெஹ்ரானில் இஸ்ரேலியப் படைகளால் ஹமாஸ் தலைமைத் தளபதி இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டது ஈரானிய அரசாங்கத்தின் கடுமையான எதிர்வினையை தூண்டியுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அலி அயதுல்லா கமேனி, இஸ்ரேலுக்கு எதிராக பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதல்களை நடத்துவதற்கு தனது இராணுவத்தை வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் மற்றும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகியவற்றுக்கு இடையே நடந்து வரும் மோதல்களால் ஐரோப்பாவில் ஏற்கனவே பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. முஸ்லீம் நாடுகள் இஸ்ரேலைத் தாக்கும் நோக்கத்தை அறிவித்ததால் அங்கு பதற்றம் நிலவுகிறது. ஆனால், அதே நேரம் அமெரிக்கா இஸ்ரேலுக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது, அதன் ராணுவத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
மார்பக அயர்னிங் என்றால் என்ன? ஆப்பிரிக்கப் பெண்களை வதைக்கும் பழக்கத்திற்குக் காரணம் என்ன?
இப்படி உலகளாவிய மோதலின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலுக்கு மத்தியில், இந்திய ஜோதிடரின் கணிப்புகள் கவனம் ஈர்த்துள்ளது. 'இந்தியன் நாஸ்ட்ராடாமஸ்' என்று அழைக்கப்படும் குஷால் குமார், மூன்றாம் உலகப் போரின் ஆபத்தைப் பற்றி எச்சரித்துள்ளார், இந்த பேரழிவு நிகழ்வுக்கான தேதிகளையும் அவர் கணித்துள்ளார்.
ஜோதிடரின் நம்பகத்தன்மை மற்றும் கணிப்புகள்
இந்தியாவில் புகழ்பெற்ற ஜோதிடரான குஷால் குமார், அவரின் ஆதரவாளர்களால் 'இந்திய நாஸ்ட்ராடாமஸ்' என்று அழைக்கப்படுகிறார். மூன்றாம் உலகப் போர் ஆகஸ்ட் 4 அல்லது 5 இல் தொடங்கும் என்று அவர் சமீபத்தில் கணித்திருந்தார். முன்னதாக, குமார் இந்த மோதலின் தொடக்கத்தைப் பற்றி இரண்டு கணிப்புகளை செய்தார்: முதலில், ஜூன் 18 க்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் போர் தொடங்கலாம் என்று கணித்தார்., பின்னர் ஜூலை 26 அல்லது 28க்கு பிறகு தொடங்கலாம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ஆகஸ்ட் 5-ம் தேதி மூன்றாம் உலகப்போர் தொடங்கும் என்று அவர் கணித்துள்ளார்.
துல்லியமான கடந்த கணிப்புகள்
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரை குஷால் குமார் துல்லியமாக கணித்திருந்தார். பிராந்திய தகராறுகள் இந்த நாடுகளுக்கு இடையே போர்களுக்கு வழிவகுக்கும் என்று அவர் கணித்தார், இதன் விளைவாக விரிவான உயிர் இழப்புகள் ஏற்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
குஷால் குமார் ஹரியானாவில் உள்ள பஞ்ச்குலாவில் வசித்து வருகிறார். அவர் ஒரு புகழ்பெற்ற ஜோதிட ஆசிரியர் ஆவார். கலிபோர்னியாவில் இருந்து வரும் 'The Mountain Astrologer' மற்றும் நியூயார்க்கில் இருந்து வரும் 'Horoscope' போன்ற முக்கிய ஜோதிட இதழ்களில் அவரின் கணிப்புகள் இடம்பெற்றுள்ளது. வேத ஜோதிடத்தில் நிபுணத்துவம் பெற்ற அவர், பொருளாதாரம், வானிலை, வணிகம், உத்தி, போர் மற்றும் உலகளாவிய விவகாரங்கள் உட்பட பல்வேறு விஷயங்களில் முன்னறிவிப்புகளை வழங்குகிறார். பிறப்பு விவரங்களின் அடிப்படையில் தனிநபர்களுக்கான வாழ்க்கை குறித்த கணிப்புகளை வழங்கி வருகிறார்.