china: china news: உலகம் முழுவதும் சட்டவிரோத போலீஸ் நிலையங்கள் திறப்பு: வல்லரசாக காட்டிக்கொள்ள சீனா முயற்சி
உலகின் சூப்பர்பவர் நாடாக மாறும் வேட்கை காரணமா, உலகின் பல்வேறு நாடுகளிலும், வளர்ந்த நாடுகளான கனடா, அயர்லாந்தில்கூட சட்டவிரோதமான போலீஸ் நிலையங்களை சீனா அரசு திறந்துள்ளது.
உலகின் சூப்பர்பவர் நாடாக மாறும் வேட்கை காரணமா, உலகின் பல்வேறு நாடுகளிலும், வளர்ந்த நாடுகளான கனடா, அயர்லாந்தில்கூட சட்டவிரோதமான போலீஸ் நிலையங்களை சீனா அரசு திறந்துள்ளது.
சீனாவின் இந்த செயல், மனித உரிமை ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு சிறையில் அதிபரா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சீனா அதிபர் ஜி ஜின்பிங்!
புலனாய்வு நாளேடான ரிபோர்டிகா வெளியிட்ட செய்தியில் “ கனடாவில் பொதுப் பாதுகாப்பு அமைப்புடன்(பிஎஸ்பி) சேர்ந்து இதுபோன்ற முறையற்ற போலீஸ்சேவை நிலையங்களை சீனா திறந்துள்ளது. இதில் 3 போலீஸ் நிலையங்கள் கிரேட்டர் டொரோன்டோவில் மட்டும் உள்ளன
இந்த சட்டவிரோத போலீஸ் நிலையங்கள் மூலம் பல்வேறு நாடுகளில் நடக்கும் தேர்தலிலும் சீனா தனது ஆதிக்கத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. சீனாவின் பஸ்ஹோ நகர போலீஸார் கூற்றுப்படி, இதுவரை சீனா 21 நாடுகளில் 30 சட்டவிரோ போலீஸ் நிலையங்களை அமைத்து கண்காணித்து வருகிறது.
சீனா ஜி ஜின்பிங்: திரைமறைவில் நடந்து வரும் அதிர வைக்கும் அரசியல் மாற்றங்கள்...இதுதான் நிஜமா?
குறிப்பாக பிரான்ஸ், உக்ரைன், ஸ்பெயின், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் இதுபோன்ற சீன காவல் நிலையங்கள் சட்டவிரோதமாக செயல்படுகின்றன. இந்த நாடுகளின் தலைவர்கள் பெரும்பாலும் சீனாவின் செயல்பாடுகள் குறித்தும், அந்நாட்டில் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் கேள்வி எழுப்பி வருபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீனாவில் நாடுமுழுவதும் பாதுகாப்பு என்ற பெயரில் ஏராளமான மனித உரிமைமீறல்களை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி செய்கிறது. குறிப்பாக மக்களை தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைப்பது, குடும்பங்களை வலுக்கட்டாயமாக பிரிப்பது மற்றும் கட்டாய கருத்தடை செய்தல் போன்றவை நடக்கிறது என்று மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
ஆனால் சீனா இந்தகுற்றச்சாட்டை மறுக்கிறது. இதுபோன்ற மையங்கள் மக்களுக்கான பயிற்சி மையங்கள். வாழ்வாதாரத்தின் தரத்தை மேம்படுத்திக்கொள்ள திறனை மேம்படுத்திக்கொள்ள உதவும் எனத் தெரிவித்தனர்”
இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.