சீனா ஜி ஜின்பிங்: திரைமறைவில் நடந்து வரும் அதிர வைக்கும் அரசியல் மாற்றங்கள்...இதுதான் நிஜமா?

சீனா அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், அந்த நாட்டின் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான அதிபராக நீடிப்பதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளிலும், விழா ஏற்பாடுகளிலும் ஜின்பிங் ஈடுபட்டு வருகிறார். உலகின் அசைக்க முடியாத தலைவராக வலம் ஜி ஜின்பிங் மேலும் தனது செல்வாக்கை, அதிகார மையத்தை வலுவாக்கிக் கொண்டு இருக்கிறார்.

China is getting for Xi Jinping coronation through Party's Congress Meet on October 2022

அப்படி என்றால் கடந்த நான்கு நாட்களாக அவரைப் பற்றி வெளியான செய்திகள் என்னவானது என்று கேட்டால், எல்லாம் அவரது செயல்தான் என்ற பதிலும் வருகிறது. ஆம், தன்னைப் பற்றிய அவதூறுகளை பரப்பி, அதில் குளிர்காய்ந்து கொண்டு இருக்கிறார் ஜி ஜின்பிங் என்று கூறப்படுகிறது. இதற்குப் பின்னால், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ''20 காங்கிரஸ் மாநாட்டை'' பிரம்மாண்டமாக நடத்துவதற்கு தயாராகி வருகிறார். அக்டோபர் 16ஆம் தேதி காங்கிரஸ் மாநாடு துவங்கி ஒரு வார காலத்திற்கு நடக்கிறது. இந்த மாநாட்டிற்கான விழா, சமீபத்தில் மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம்  எலிசபெத் மறைவின்போது செய்த பிரம்மாண்டங்களை விட பெரிய அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது. 

சீனா தலைநகர் பீஜிங்கிற்கு ராணுவம் விரைகிறது, விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, சீன அதிபர்களாக ஹூ ஸின்டாவோ அதிகாரத்தை பறித்துக் கொண்டார். இவருக்கு உறுதுணையாக முன்னாள் பிரதமர், வெஞ்சிபாவோ உள்ளார் என்று செய்திகள் உலா வந்தன. ஆனால் இவற்றை எல்லாம் கடந்து சீனாவின் ஒரே கட்சி, ஒரே ஆட்சி, ஒரே அதிகாரம் என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார் ஜி ஜின்பிங்.

வீட்டு காவலில் சீனா அதிபர் ஜி ஜின்பிங்.. ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் - உண்மையில் சீனாவில் என்ன நடக்கிறது ?

அக்டோபர் 16ஆம் தேதி துவங்கும் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு 2,296 பிரதிநிதிகள் அழைக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களில் 200 முழுநேர உறுப்பினர்களும், 170 மாற்று உறுப்பினர்களும் அடங்குவர். யார் கட்சியில் இருந்தாலும் அவர்கள் எல்லாம் வெறும் ரப்பர் ஸ்டாம்புகள் தான். அனைத்து அதிகாரங்களும் ஜி ஜின்பிங்கிடம் மட்டுமே குவிந்து கிடக்கும். கடந்த 2018ஆம் ஆண்டில் சீனாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதாவது, அதிபருக்கான அதிகார வரம்புகளில் திருத்தம் செய்யப்பட்டது. இது அடுத்த 5 ஆண்டுகளுக்கும் அதிபராக நீடிப்பதற்கு தற்போது ஜி ஜின்பிங்கிற்கு வழி வகுத்துக் கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், மத்திய ராணுவ கமிஷனின் தலைவராகவும் ஜி ஜின்பிங் நீடிப்பார். இருந்தாலும், கட்சியும் அங்கீகரிக்க வேண்டும் அல்லவா. அதற்குத்தான் இந்த காங்கிரஸ் மாநாடு.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு அங்கமாக இந்த மத்திய ராணுவ கமிஷன் செயல்படுகிறது. இதன் முழு அதிகாரமும் ஜி ஜின்பிங்கிடம் உள்ளது. அதாவது, மக்கள் விடுதலை ராணுவத்தின் மூத்த பணியிடங்களை  நிரப்புதல், ராணுவ துருப்புகளை பணியமர்த்தல், ராணுவத்திற்கான செலவினங்களை முடிவு செய்தல் ஆகியவை இந்தக் கமிஷனால் முடிவு செய்யப்படுகிறது. ஒரு கட்சி, இரண்டு பெயர்கள் என்ற போர்வையில்  கட்சியும், கமிஷனும் செயல்படுகின்றன.

ரஷ்யா, அமெரிக்காவுக்கு ஆப்பு.. சீனா அரசியல் சாசனத்தை மாற்றியவர் - யார் இந்த சீனா அதிபர் ஜி ஜின்பிங் ?

காங்கிரஸ் மாநாட்டில் இந்த திருத்தங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ''மத்தியக் கட்சி அதிகாரிகளின் மையமாக ஜி ஜின்பிங் திகழ்வார். முழுக் கட்சியின் மையமாகவும் நிலைநிறுத்தப்படுவார். புதிய சகாப்தத்திற்கான சீன கலாச்சாரத்துடன் மிகப்பெரிய தலைவராக ஜி ஜின்பிங் முன்னிறுத்தப்படுவார். சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஜி ஜின்பிங் கொள்கைகள் புகுத்தப்படும். இதையடுத்து,  சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் மத்திய ராணுவ கமிஷனின் வரம்புகள் முழுவதுமாக நீக்கப்படும். இந்த இரண்டு உயர் பதவிகளின் கால வரம்பை கட்சியின் அரசியலமைப்பு தற்போது குறிப்பிடவில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டு நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் மட்டுமே இதற்கான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி கட்சியிலும் மாற்றம் செய்யப்படும், ஜி ஜின்பிங்கிற்கு மணி மகுடம் சூட்டப்படும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios