இந்தியாவின் மேலும் சில நகரங்களில் விமான சேவையை தொடங்க துபாய் தீவிரம்… அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம்!!

இந்தியாவின் மேலும் சில நகரங்களில் விமான சேவையை தொடங்க அனுமதி கேட்டு துபாய் விமான போக்குவரத்து ஆணையம் இந்திய விமானத்துறைக்கு கடிதம் எழுதி உள்ளது. 

dubai wrote letter to central govt regarding air service in india

இந்தியாவின் மேலும் சில நகரங்களில் விமான சேவையை தொடங்க அனுமதி கேட்டு துபாய் விமான போக்குவரத்து ஆணையம் இந்திய விமானத்துறைக்கு கடிதம் எழுதி உள்ளது. வேலை தேடி வெளிநாடுகளுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் இருந்து துபாய்க்கு வேலை தேடி செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அபுதாபி, கத்தார், ஏமன், சார்ஜா ஆகிய பகுதிளில் இந்தியர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இதையடுத்து துபாய் நாட்டில் இருந்து அதிக விமானங்களை இயக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. துபாயில் இருந்து தற்போது இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, ஆமதாபாத், பெங்களூரு, சென்னை, ஐதராபாத், கொச்சி, கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 9 நகரங்களுக்கு விமான சேவை இருந்து வருகிறது.

இதையும் படிங்க: யாருயா நீ! உலகிலேயே முதல்முறை! ஒரே நேரத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை, கொரோனா, ஹெச்ஐவி தொற்று

இந்த நிலையில் அமிர்தசரஸ், திருச்சி, கோவை, கண்ணூர், கோவா, புவனேசுவர், கவுகாத்தி, புனே ஆகிய நகரங்களுக்கு விமான சேவையை தொடங்க துபாய் தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக துபாய் விமான போக்குவரத்து ஆணைய இயக்குனர் முகமது அலி இந்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், துபாயில் இருந்து இப்போது இந்தியாவுக்கு வாரத்திற்கு 183 விமான சேவை இருந்து வருகிறது. 2014 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி தற்போது 65,200 விமான இருக்கைகள் உள்ளன.

இதையும் படிங்க: இலங்கை அரசு தடை ! சாக்லேட், ஷாம்பு, பெர்பியூம் உள்பட 300 வகை பொருட்கள் இறக்குமதிக்கு ‘நோ’

கடந்த 7 ஆண்டுகளாக இந்தியா-துபாய் இடையே விமான சேவை நல்ல வளர்ச்சியை பெற்று உள்ளது. சரக்கு விமான போக்குவரத்து மூலம் 2 நாடுகளுக்கும் நல்ல லாபமும் கிடைத்து வருகிறது. இதனால் இந்தியாவுக்கு மேலும் விமான சேவை தொடங்க துபாய் ஆர்வமாக உள்ளது. வாரம்தோறும் 50 ஆயிரம் விமான இருக்கைகளை அதிகரிக்கவும் உள்ளோம். விமான சேவைக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக இந்தியா பரீசிலனை செய்ய வேண்டும். இரு நாட்டு விமான போக்குவரத்து ஆணைய பிரதிநிதிகள் சந்தித்து பேசுவது தொடர்பாக முடிவு எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios