Asianet News TamilAsianet News Tamil

sri lanka crisis: இலங்கை அரசு தடை ! சாக்லேட், ஷாம்பு, பெர்பியூம் உள்பட 300 வகை பொருட்கள் இறக்குமதிக்கு ‘நோ’

இலங்கையின் பொருளாதாரச்சூழல், அந்நியச்செலாவணிப் பற்றாக்குறை ஆகியவற்றால் 300 வகையான பொருட்கள் இறக்குமதிக்கு இலங்கை அரசு திடீர் தடை விதித்துள்ளது.

Sri Lanka has banned the import of 300 consumer goods in order to stabilise the economy.
Author
Colombo, First Published Aug 24, 2022, 2:35 PM IST

இலங்கையின் பொருளாதாரச்சூழல், அந்நியச்செலாவணிப் பற்றாக்குறை ஆகியவற்றால் 300 வகையான பொருட்கள் இறக்குமதிக்கு இலங்கை அரசு திடீர் தடை விதித்துள்ளது.

குறிப்பாக சாக்லேட், பெர்பியூம், ஷாம்பு உள்ளிட்ட 300வகையான பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது இலங்கை அரசு.

மலேசியாவில் பயங்கர நிலநடுக்கம்... ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு!!

கடந்த 1948ம் ஆண்டுக்குப்பின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை அரசு சந்தித்து வருகிறது. அரசிடம் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துவிட்டதால், பெட்ரோல், டீசல் இறக்குமதிக்குகூட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், பால்பவுடர், உணவுகள் என அனைத்தும் விண்ணும் முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது.

இதையடுத்து பொருளதாரத்தை நாசமாக்கிய அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே இருவருக்கும் எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தால் இருவரும் பதவியிலிருந்து விலகினர். 

மைக் டைசனின் அரிதான ஃபெராரி எப்-50 கார் ஏலம்: ரூ.3.19 கோடிக்கு விலை போனது

இதையடுத்து, அதிபர் ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்று அவர் தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்று, பல்வேறுசீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முதல்கட்டமாக பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் சிக்கன நடவடிக்கையாக, 300 வகையான பொருட்கள் இறக்குமதிக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. 

குறிப்பாக பெர்பியூம், மேக்அப் சாதனங்கள், ஷாம்பு, சாக்லேட்கள் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் உணவு முதல் எந்திரங்கள் வரை பல்வேறு பொருட்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

வெளிநாடுகளில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் கடந்த ஏப்ரல் மாதம் கடனைச் செலுத்த முடியாமல் திவால் நிலையை இலங்கை அரசு அறிவித்தது. 

இம்ரான் கான் கைதாகிறார்? தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அரசு வழக்கு

இதையடுத்து, பொருளாதாரத்தை இயல்புநிலைக்குக் கொண்டுவரும் வகையில் நிதியுதவி கேட்டு சர்வதேச நிதியத்தை இலங்கை அரசு நாடியுள்ளது. இந்தஆண்டுஇறுதிக்குள் நிதியுதவியை சர்வதேச செலாவணி நிதியம் வழங்கும் என இலங்கை அரசு நம்புகிறது
 

Follow Us:
Download App:
  • android
  • ios