imran khan arrested: இம்ரான் கான் கைதாகிறார்? தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அரசு வழக்கு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நீதிபதிகளையும், போலீஸாரையும் மிரட்டி வழக்கில் அவர் மீது தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நீதிபதிகளையும், போலீஸாரையும் மிரட்டி வழக்கில் அவர் மீது தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதனால் பிடிஐ கட்சித் தலைவர் இம்ரான் கான் எந்த நேரத்திலும் பாகிஸ்தான் போலீஸாரால் கைது செய்யப்படலாம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தி நியூஸ் இன்டர்நேஷனல் செய்தியின்படி இம்ரான் கான் மீது தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அரசு நேற்று இரவு வழக்குப்பதிவு செய்துள்ளது.
இஸ்லாமாபாத் நகரில் சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் மக்கள் மத்தியில் இம்ரான் கான் பேசினார். அப்போது, “ நீதிபதிகளையும், இஸ்லாமாபாத் போலீஸாருக்கும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையிலும் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இம்ரான் கான் மீது தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுசெய்ய போலீஸார் முடிவு செய்தனர்.
அச்சச்சோ..! 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில்.. தூங்கிய விமானிகள்.. காத்திருந்த அதிர்ச்சி!
அதுமட்டுமல்லாமல் கடந்த வாரம் இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளர் ஷான்பாஸ் கில், ராணுவம் குறத்து கண்டனத்துக்குரிய, ஆட்சேபத்துக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததால், அவர் தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமாசெய்தபின் இம்ரான் கான் ராணுவம் குறித்தும், போலீஸார், அரசு அமைப்புகள் குறித்தும் தொடர்ந்து ஆதாரப்பூர்வமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகிறார்.
இதனால், பாகிஸ்தானில் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் ஒழுங்குமுறை ஆணையம்(பிஇஎம்ஆர்ஏ) இம்ரான் கான் பேச்சை நேரலை செய்யக்கூடாது. அவர் பேசியபின் அதை எடிட் செய்துதான் ஒளிபரப்ப வேண்டும். அவரின் ஆத்திரமூட்டும் பேச்சுகள் மக்கள் அமைதிக்குகுந்தகம் விளைவிக்கிறது” எனத் தெரிவித்திருந்தது.
இலங்கை வழியில் பூட்டான்; அந்நிய செலாவணி இருப்பு குறைவு; வாகனங்கள் இறக்குமதிக்கு தடை!!
இந்நிலையில் சனிக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் தெஹரீக் இ இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவர் இம்ரான் கான், பெண் நீதிபதி ஒருவருக்கும், போலீஸ் உயர் அதிகாரிகள் இருவருக்கும் அச்சுறுத்தல்விடுக்கும் வகையிலும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியுள்ளார்.
இது தொடர்பாக இஸ்லாமாபாத் சத்தார் மாஜிஸ்திரேட் அலி ஜாவித், அளித்த புகாரின் அடிப்படையில் போலஸீார் இம்ரான் கான் மீது மீது தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் பிடிஐ கட்சித் தலைவர் இம்ரான் கான் எந்த நேரத்திலும் பாகிஸ்தான் போலீஸாரால் கைது செய்யப்படலாம் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவில் 'செட்டில்'?
தன்மீதான வழக்குப்பதிவுக்கு பதில் அளித்து இம்ரான் கான் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் , “ பிரதமர் ஷான்பாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு இனவெறியுடன் நடக்கிறது. என்னுடைய பேச்சை மக்கள் கேட்கவிடாமல் தடுக்கிறது. எனக்கு எதிரான போரில் அவர்கள் தோற்றுவிட்டார்கள், இதனால் இனவாதத்தை கையில் எடுக்கிறார்கள். அவர்கள் இனவாதத்திலும் தோற்பார்கள். பாசிசவாதிகளுக்கு எதிராக மக்கள் தங்கள் குரலை உயர்த்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.