Monkeypox: viral:யாருயா நீ! உலகிலேயே முதல்முறை! ஒரே நேரத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை, கொரோனா, ஹெச்ஐவி தொற்று
உலகிலேயே முதல்முறையாக ஒருவர் குரங்கு அம்மை, கொரோனா மற்றும் ஹெச்ஐபி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உலகிலேயே முதல்முறையாக ஒருவர் குரங்கு அம்மை, கொரோனா மற்றும் ஹெச்ஐபி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இத்தாலியைச் சேர்ந்த 36வயது இளைஞருக்கு இத்தகைய உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இளைஞரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த தகவல் ஜர்னல் ஆஃப் இன்பெக்ஸன் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இளைஞர் ஸ்பெயினுக்கு 5 நாட்கள் பயணம் சென்றுவிட்டு தனது நாட்டுக்குத் திரும்பினார். முதலில் அவருக்கு தொண்டை நமச்சல், தலைவரி, தொடைப்பகுதியலி் வீக்கம் ஆகியவை தொடர்ந்து 9 நாட்களுக்கு இருந்தது. இந்த அறிகுறிகள் வந்த 3வது நாளில் அந்த இளைஞர் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
அதன்பின் நாட்கள்செல்லச் செல்ல தோல்பகுதியில் அரிப்பு, முகம், உடலின் பலபகுதிகளில் சறிய கொப்புளங்கள் ஏற்பட்டன. இந்த அறிகுறிகள் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்ததில் அவருக்கு குரங்கு அம்மை இருப்பது தெரியவந்தது.
அந்த இளைஞரின் உடல் முழுவதையும் தீவிரமாக பரிசோதனைக்கு உட்படுத்தியதில் உடலின் பல்வேறு பாகங்களிலும், ஆண் உறுப்பிலும் கொப்புளங்கள், தடிப்புகள் இருந்தன. நுரையீரல் மற்றும் மர்மஉறுப்பு விதைகளும் வீங்கி இருந்தன.
மைக் டைசனின் அரிதான ஃபெராரி எப்-50 கார் ஏலம்: ரூ.3.19 கோடிக்கு விலை போனது
இதனால் குரங்கு அம்மையால் முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. அதன்பின் மர்ம உறுப்புகளில் அறிகுறிகள் இருந்ததால், அவருக்கு நடத்தப்பட்ட ஹெச்ஐவி பரிசோதனையில் ஹெச்ஐவி இருப்பதும் உறுதியானது. மேலும் ஒமைக்ரான் பிஏ.5. வைரஸ் பாதிப்பு இருந்தது.
இந்த இளைஞர் கொரோனா தடுப்பூசியான பைசர் மற்றும் எம்ஆர்என்ஏ தடுப்பூசியும் செலுத்திய போதிலும் இத்தனை வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்த இளைஞர் குறித்த செய்தி கடந்த 19ம் தேதி இதழில் பிரசுரமாகியுள்ளது. ஏறக்குறைய ஒரு வாரத்துக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இந்த இளைஞர் முதலில் கொரோனாவிலிருந்தும், பின்னர் குரங்கு அம்மையிலிருந்தும் குணமடைந்தார். இருப்பினும் உடலில் லேசான தழும்புகள் உள்ளன. ஹெச்ஐவி நோய்க்கான சிகிச்சை அந்தஇளைஞருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில் “ உலகிலேயே இதுபோன்று 4 வைரஸ்கள் ஒரே நேரத்தில் ஒரு நபரை தாக்குவது இதுதான் முதல்முறை. குரங்கு அம்மை, கோவிட், ஒமைக்ரான், பாலியல் நோய் என அனைத்தும் ஏற்பட்டுள்ளது. இந்த நபர் குணமடைந்தாலும், அடுத்த சில மாதங்களுக்கு மக்கள் மத்தியில் செல்லாமல் ஒதுங்கியே இருக்கவேண்டும். மக்கள் மருத்துவ விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்”எ னத் தெரிவித்தனர்